பணத்தை இலக்காக வைக்கும் கல்வி தேவையா?

1 comments
“கடலுக்குப் பயந்தவன் கரையில் நின்றான் ....................அதை படகினில் கடந்தவன் உலகை கண்டான்

சுமார் 62 ஆண்டுகள் விடுதலை பெற்று ஆகிவிட்டது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்

நோக்கமாக இருந்த்து. அடிபடையும் இதுவாகத்தான் இருக்கும்.

ஆனால் நிலை ?

வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் நிலை அப்படியே தான் உள்ளது.எண்ணிக்கை மட்டும் கூடிக்கொண்டே இருக்கிறது. சமூக பொருளாதார நிலை மேன்பாடு அப்படியேதான் உள்ளது.

கல்வி பொதுவானதாக இல்லை.

பணம் உள்ளோருக்கு ஒரு கல்வியும் இல்லாத வறிய மக்களுக்கு ஒருவிதக்கல்வியும் வழங்கும் அமைப்பாகவே உள்ளது. 35 விழுக்காட்டுக்கு குறைவாகவே கிராமப்புற மாணவர்கள் தொழில் நுட்ப கல்வியை பெற்றுள்ளதாக அரசு புள்ளிவிரங்கள் கூறுகிறது. 90 விழுக்காடு உள்ள மக்கள் சமூதாயத்துக்கு 35 விழுக்காட்டுக்கு குறைவாக வழங்குவது கிடைப்பது வெட்கக்கேடான செய்தியாகும்.

ராஜீவ் ஆட்சிக்காலத்திலும் புதிய கல்விக் கொள்கையிலும் நவோதயா கல்வி என்று அறிமுகப்படுத்த திட்டங்கள் தீட்டப்பட்ட்து. மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என அமையவிருந்த பள்ளியில் நீச்சல் குளம், கணினி, தொழில் நுட்ப பாட்த்திட்டம் ஊடான கல்வி என்று அவர் கொண்டு வர முணைந்தார். அதில் யார் பலன் பெற்று இருப்பார்கள் ? உயர் சாதியினர், வசதியில் மேல் நிலையில் உள்ளோரே பயன் பெற்று இருப்பார்கள். மக்களின் கடும் எதிர்ப்பால் இங்கு செயல் படுத்தவில்லை.

அரசுக் கல்வி கேவலமானதா ?

என் மகனை 10 ஆண்டுகளுக்கு முன் கிராமம் சார்ந்த அரசுப்பள்ளியில் சேர்க்கச் சென்றேன். அங்கு பணியாற்றிய ஆசிரியை “ இதைவிட நல்லப்பள்ளி வேறு இருப்பதாகவும் இங்கு வேண்டாம் என்றும் எனக்கு அறிவுறுத்தினார்.

இதைக்கண்டு நான் அதிர்ந்து போனேன். அவர் சொன்னது அருகில் இருந்த ஒரு தனியார் பள்ளி காண்வெண்ட் ஆகும்.கிராமப்பகுதியில் உள்ள அப்பள்ளியில் நடுத்தர வகுப்பை சார்ந்த எனது மகனை சேர்ப்பதை அவர் விரும்பாதது அவரின் குறையல்ல. ஏனென்றால் அரசுப்பள்ளியில் படிப்பது இழிவானதாக கேவலமானதாக ஆகிவிட்டது.. ஆனால் என் மகன் அப்பள்ளியில் சேர்த்து இப்போதும் அரசு பாடத்திட்டம் உள்ள அரசுப்பள்ளியில் தமிழ் பயிற்று மொழியாகவே படித்து வருகிறான் என்பதை நான் இங்கு பதிவு செய்கிறேன்

ஆசிரியரும் ஒரு காரணமே!

அரசுப்பணியில் அவர் பணியாற்றுவார். ஊதியம் வாங்குவார். ஆனால் அவர் பிள்ளைகளை பக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணம் கொடுத்து படிக்க வைப்பார். தமிழகத்தில் இந்நிலை 100க்கு 90 விழுக்காடுக்கு குறைவில்லாமல் இருக்கும். இப்படி இருந்தால் கல்வி நிலை எப்படி மேம்படும். கல்வியின் தரம் முரண் இங்கேயே தோன்றுகிறது. மாத ஊதியம் இங்கே பெற்றுதனியார் பள்ளியில் படிக்கவைப்பது அரசுப்பள்ளியில் படிக்க வைப்பதிலேயே அவர் பணியாற்றும் கல்வியின் தரம் கீழே செல்கிறது.


கல்வியில் பலவிதம்

அரசுப்பள்ளிகள் ஒருபக்கம் மெட்ரிக்குளேசன், மற்றொரு பக்கம் ஆங்கிலவழிப்பள்ளிகள்,சிபிஎஸ்இ என்ற பிரிவுகள் பணம் செலவுக்கு ஏற்ப கிடைக்கும்.

அப்பாவும் அம்மாவும் ஏதாவது டிகிரி படித்து இருந்தால் மட்டுமே சேர்க்கைத்தரும் பள்ளிகளும் உள்ளது.

தமிழே படிக்காமல்...

தமிழ்நாட்டில் மட்டும் ஒருவர் தமிழை பயிலாமலேயே பட்டம் வாங்கலாம். வேலையும் வாங்கலாம். தமிழைத்தாய் மொழியாக படித்தவன் நிலை கானல் நீரே!

தமிழ் மீடியம் என்ற ஏளனம். கிண்டல் .

சிறப்பு பொருளாதார மண்டலம் காட்டும் படிப்பினைகள்.

சிறப்பு பொருளாதார மண்டங்கள் பல இடங்களில் ஆரம்பிக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்கள் பெரிய பெரிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல ஆயிரம் நிலங்களை அரசு கையகப்படுத்தி தருகிறது. நிலம் கொடுத்தவனுக்கு வேலை உத்திரவாதம் பெயருக்குத்தான். தொழில் நுட்ப கல்வி இல்லாத கிராமமக்கள் போட்டிப்போடும்

போட்டிப்போடும் வேலை எது தெரியுமா? பெருக்குதல், கக்கூஸ் கழுவுதல், செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற... கல்வியின் நிலை இதுதான்.

அந்த ஏழை உழவனுக்கு என்ன தரப்போகிறது இந்த சிறப்பு பொருளாதாரமண்டலம்?.

சமூக சமமிண்மையே கலகத்திலேயே முடியும்.

சமச்சீர் கல்வி அனைத்து அரசியல் கட்சிகள் பொது நலன் கருதி ஆதரிக்க வேண்டும்.சமச்சீர் கல்வித்திட்டம் எல்லாவற்றையும் மாற்றிவிடாது ? ஆனால் சமூக இணக்கத்திற்கு ஒரு நல்ல துவக்கமாக இருக்கும். தவறுகளை திருத்துவோம். கல்விதிட்டத்தை மேம்படுத்து வோம்.

சமூக முரண் என்றுமே அமைதியாக இருக்காது. அது போல சமச்சீர் கல்வி தேவை நாடு வளர, மேம்பட சமச்சீர் கல்வியே அவசியம்.

வழக்குப்போடும் தனியார் கல்வி நிறுவனங்கள்.

பணமுதலீட்டை முதன்மை படுத்தும் இவர்களுக்கு வயிற்றை கலக்குகிறது. சமூக மேம்பாடு என்றல்லாம் இவர்களுக்கு நோக்கமில்லை. பணமே இலக்கு. இலாபமே குறிகோள். கல்வி இரண்டாம் நிலையே. நடுத்தர மக்களை கையில் வைத்துக்கொண்டு கிளர்ச்சியில் ஈடுபட திட்டம் தீட்டி இருக்கிறார்கள்.

இதை எதிர்த்து போராட அனைத்து கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. ஊடகங்களுக்கு சமூகக் கடமை இருக்கிறது.

மக்களுக்கான கல்வி திட்டம்.

மாற்றுக் கல்விதிட்டம் அவசியம். மெகாலே கல்வி திட்டத்தை வீட்டுக்கு அனுப்புவோம்.

அனைவருக்குமான கல்வி தாய்மொழியில் கிடைக்க வேண்டும்.

தாய்மொழியில் படித்தவர்களுக்கு வேலையில் முன்னுரிமை போன்ற செயல் பாடு தொடர்ச்சியாக நடை பெற்றால் தமிழ்ச்சமூகம் மேம்படும்.

இன்னொரு ஜப்பானை தமிழகத்தில் உருவாக்கும் நிலை தூரத்தில் இல்லை. இதற்கு சமச்சீர்கல்வி உதவி செய்யும்.

thanks http://anjaan1.blogspot.com/2009/09/blog-post_08.html










read more...
பணத்தை இலக்காக வைக்கும் கல்வி தேவையா?SocialTwist Tell-a-Friend