மொட்டை தலையும் முழங்காலும்

1 comments
அறிவும் அதிகாரமும் இணையும் புள்ளி முக்கியமானது

பிரித்தானிய காலனிய அரசானது 1834-ல் பலதுறை சார்ந்த அறிஞர்களைக் கொண்டு 'லண்டன் புள்ளியியல் கழகத்தை' துவக்குகிறது.

மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளை அடிப்படையாகக் கொண்ட புள்ளியியல் ஆய்வுகள் ஒரு ஆளுகைத் தொழில் நுட்பமாக (technology of governmentalizing) செயல்படுகிறது.

கெளடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒரு அரசின் கொள்கைகளை வகுப்பதற்கும், வரிவசூல் செய்வதற்கும் அவசியமானது என்று சொல்லப்பட்டுள்ளது (History of Indian Census, Office of the Register General & Census Commisioner, India-HIC).

பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஒரு பண்புரீதியான மாற்றம் இருந்தது. அது மக்கள் பராமரிப்பு என்கிற பொதுநோக்கு தொழில்நுட்பத்திற்கானது என்பதைவிட தனது காலனிய நாடுகளின் மக்களை புரிந்து கொள்வதற்கும் தனது அதிகார அமைப்பை கட்டமைக்கவும் மக்களை ஆளுகை செய்வதற்கான நுட்பங்களை படிக்கவுமான ஒரு அறிவுக் கட்டமைப்பாகச் செய்யப்பட்டது.  britemp5இச்செயலானது மூன்று முக்கிய அடிப்படைகளைக் கொண்டிருந்ததை காணமுடிகிறது


1.தனக்கு அயலான ஒரு சமூகத்தை புரிந்துகொள்ள முயல்வது
2. அதனை ஆள்வதற்கான அதிகார விதிகளைக் கண்டறிவது
3.தனது அதிகார அமைப்பிற்கேற்ப காலனிய சமூகத்தை மறுகட்டமைப்பு செய்வது.
read more...
மொட்டை தலையும் முழங்காலும்SocialTwist Tell-a-Friend