வெற்றிவேற்கை எனும் தமிழ் நூல் நீதி நூல் ...அதில் நீதி மட்டும் போதிக்காமல் ஒரு சரித்திர உண்மையையும் கூறி உள்ளார் . அதை காண்போம் .
''இருவர் தம் சொல்லையும் எழுதரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையார் ஆயின்
மனு முறை நெறியின் வழக்கு இழந்தவர் தம்
மணமுற மருகி நின்று அழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழி வழி ஈர்வதோர் வாள் ஒக்கும்மே.''
பொருள் :வழக்கு தொடுத்தவர் அதனை மறுப்பவர் இருவர் கூற்றையும் எழு முறை கேட்டு அவை பொருந்த வராமல்
நீதி முறையாக கிடைக்க வில்லையானால் வழக்கை இழந்தவர் அறம் பிறழா மனதுடன் நின்று அழுத கண்ணீர் அறமுறை பிழையாது நீதி வழங்கும் ஆற்றல் மிக்க தேவர் மூவர் { சேர , சோழ ,பாண்டியர் } காக்கினும் . அந்த கண்ணீருக்கு காரணமானவர் வழி வழி தோன்றும் வாரிசுகளையும் அழிக்கும் வாளாகும்..
இந்த பாடலை இயற்றியவர் ஒரு பாண்டிய மன்னராவார்.
அவர் தேவர் மூவர் என்று சேர , சோழ பாண்டியரை விளித்து இருப்பதால்
மூவரசரும் தேவர் அதாவது முக்குலதோர் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் .
எனவே தற்க்காலத்தில் சிலர் மாறுபட கூறி வருவது முக்குலதோர் மீது உள்ள காழ்ப்பு உணர்ச்சியால் என்பதை அறியலாம் ..
இதில் முறையுறத் தேவர் மூவர் என்பதில்
பொதுவாக முப்பெரும் தேவர் என சிவன் ,திருமால் , பிரமன் இவர்களை குறிப்பிடுவர் ...
மூவர் என்பது தமிழில் பொதுவாக சேர , சோழ ,பாண்டியரை குறிக்கும் .
ஆனால் இதில் முறையுற என்பதை கவனிக்க வேண்டும் . அதாவது நீதி நெறி வழுவாமல் காப்பாற்றுவது அரசர்களை குறிக்கும் ...
எடுத்துக்காட்டாக
"முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும் ."எனும் திருக்குறள் வாயிலாக அறியலாம் .
ஆதலால் இங்கு நீதி நெறியுடன் அரசு நடத்தும் சேர ,சோழ , பாண்டியரை குறிக்கும் என்பதை நன்கு அறியலாம்
எழுதியவர் : அல்லூர் கிழார் : சாமி .கரிகாலன் மற்றும் முகுந்தகுமார்[எ] மாயதேவர்
1 comment:
Thanks Maya for sharing this.
Post a Comment