மதுரை--------பெண் சிசுக்களைக் கொல்கிறார்கள்
"முப்பது வருசமாக செஞ்ச பாவம் இப்ப எங்க கிராமத்தையெல்லாம் கதறி அழவக்குதப்பா"
1980ல் தொடங்கி 2010 இன்று வரை நீடிக்கும் ஒரு கொடுமை. கள்ளி பால் ஊற்றி பெண்சிசுகளை கொல்லும் செயல் முக்குலத்துக்கும் பெயர்பெற்ற மதுரையைச் சுற்றியுள்ள 24 கிராமங்களில் இந்த கதறல்கள் கேட்கிறது.
ஏன் பெண் சிசுக்களைக் கொல்கிறார்கள்.
1. பெண் குழந்தைகள் பிறந்தால் வளர்த்து ஆளாக்கி, கட்டிக்கொடுத்து கடைசி வரை செலவு செய்தாக வேண்டும் என்ற பொருளாதார நெருக்கடியே அடிப்படை காரணம்.
2. பெண் குழந்தைகள் பிறக்கும் வீட்டை மற்ற குடும்பத்தினர் ஏளனமாக பார்க்கும் இழிவு.
3. பெண்களைக் கட்டிக்கொடுக்க 1 கிலோ தங்கம் தேவைப்படுகிறது. அதற்கு பின்னரும் தொடரும் வரதட்சனைக் கொடுமை.
4. பெண்களும், ஆண்களுக்கு சமமாக படிப்பதால் இருவருக்கும் நான் பெரிசா! நீ பெரிசா!! என சண்டைப்போட்டுக்கொண்டு மதுரைக்கோர்ட்டுக்கு படியேறுகிறார்கள்.
5. நல்ல படிக்கட்டும்ன்னு உயர்கல்விக்காக வேறு ஊர்களுக்கு அனுப்பும் போது சாதி மாறி காதலிப்பதால், அதனால் பெற்றோர்களுக்கு ஏற்படும் அசிங்கத்தால் பெற்றோர்கள் தற்கொலை செய்துக்கொள்ளுவது நீடிக்கிறது.
எப்படி கொல்லுகிறார்கள்
1. கள்ளிப்பால் ஊற்றுவது
2. நெல்மணியை ஊட்டுவது
3. கொதிக்க கொதிக்க கோழி சாறு கொடுப்பது.
இதன் எதிர் விளைவு
1. பெண்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதால் திருமணத்திற்கு பெண் கிடைப்பதில்லை.
2. சிசு கொலை நடக்கும் ஊர் என்பதால் மற்ற ஊரினர் பெண்கொடுக்க மறுக்கின்றனர்.
3. நீண்ட காலம் திருமணம் ஆகாமல் இருப்பதால் வாலிபர்கள், மதுரை போன்ற ஊர்களில் இருக்கும் தவறான இடத்திற்கு செல்வதால் பால்வினை நோய்களுக்கு உள்ளாகி ஆரோக்கியம் பாதிக்கும் அவலநிலை உண்டாகிறது.
4. இளைஞர்கள் இளமை இழந்துக்கொண்டிருக்கிறார்கள்
தீர்வு
1. வரதட்சனை இல்லாமல் திருமணம் செய்துக்கொள்வது.
2. பழைய காலம் போல பெண்வீட்டாருக்கு வரதட்சனைக் கொடுத்து திருமணம் செய்துக்கொள்ளுவது.
3. பெண்களை மதிக்கும் பண்பாட்டை உருவாக்குவது.
4. ஆணும், பெண்ணும் சமம் என்ற கருத்தை மக்கள் மனதில் வலுவாக பதியவைப்பது.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
unmayana seithi anal..... ithu innamum nadakiratha?....... vetkapataventiya visayam....... kandipa enka area pakkam ithu illa......
இது தவறுங்க இன்னுமா இந்த நிலை உள்ளது. கொடுமை, மடமை,அயோக்கியதனம்
Post a Comment