Showing posts with label பசும்பொன் தேவர். Show all posts
Showing posts with label பசும்பொன் தேவர். Show all posts

ஒரு சாதாரண மனிதனின் பசும்பொன் பயணம்

4 comments
ஒரு சாதாரண மனிதனின் பசும்பொன் பயணம் 
அக்டோபர் 30 ஆம் அன்று பசும்பொனில் இருக்க வேணும் என்று திட்டம் .....
அக்டோபர் 29 சென்னை மாநகரில் இருந்து வெயில் அலைபேசியில் அழைக்கிறார்..
நள்ளிரவு நாலு மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் சந்திப்பதாக திட்டம் ..

இரவு மழையுடன் புறப்பட்டு மதுரை மாநகரை நோக்கி ......
மதுரை நோக்கி செல்லும் வழி அனைத்தும் காவல் துறை கண்காணிப்பு கடும் பரிசோதனை ...எதற்கு இவ்வளவு பரிசோதனை ......பாதுகாக்கவா???...

எல்லா வாகனத்தையும் வீடியோ பதிவு ...
தனி வாகனத்தில் செல்பவர்கள் புறப்படும் பகுதியில்  காவல் நிலையத்தில் பதிவு இது எதற்கு பாதுகாக்கவா??...
வேறு எதற்க்குமா  ?.......

ஒரு வழியாக மதுரை சென்று அடைந்து அருப்புக்கோட்டை வழியாக தும்மு சின்னன்பட்டி எனும் அந்த அழகிய சிறு கிராமத்துக்கு வெய்லணன் உடன் சென்று அடைந்தேன் ...
இது வரை ஒரு சாதாரண பயணம் ..

இனி மேல் தான் பல ஆச்சரியங்களை சந்தித்தேன் .....
பத்திரிக்கைகளை பல படி எழுதி வருகிறார்கள் ....
முக்குலத்தோர் முரடர்கள் , கலவரம் செய்பவர்கள் தேவர் ஜெயந்தி நாட்களில் மது அருந்தி ஆடி கொண்டு பொது இடங்களில் முரட்டு தனமாக நடந்து கொள்பவர்கள் என்று ஒரு பிம்பத்தை மீடியா உருவாக்கி இருக்கிறது ...

தமிழகத்தின் மற்ற பகுதி மக்கள் தேவர் ஜெயந்தி என்றால் தென் தமிழகத்தில் கலவரமாக இருக்கும் என்று ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்துள்ளனர் ...

ஆனால் உண்மை நிலை என்ன ?...
என்ன ஆச்சரியம் .......
நான் பார்த்தவரை மது அருந்திய தேவர் பெருமக்களை ஒருவரை கூட பார்க்கவில்லை .....
மது அருந்தி தரம் தாழ்ந்த மக்கள் இருக்கும் இடத்தில மகளிர் இருப்பதில்லை ....இருக்கமாட்டார்கள் ...இது நீங்கள் அறியாததில்லை

ஆனால் பசும்பொன்னில் என்ன நிலவரம் ...
தேவர் பெருமக்கள் குடும்பம் குடும்பமாக வந்தனர் ..
தாய், தந்தை , மகள் , மகன் ,வயதுவந்த பெண்பிள்ளைகள் ,வயது முதிர்ந்த பெண்மணிகள் ,உடல் ஊனமுற்ற ஆண் பிள்ளைகள் ,முளைச்சு மூணு இலை விடாத குழந்தைகள் என ஒரு கிராமத்து திருவிழா போன்று இருந்தது ....

வேறு குற்றம் செய்கிறார்களா ?
இல்லை ....

என்னது இல்லையா ?  பொய் சொல்லாதீர்கள் என்கிறீர்களா ?
இல்லை நண்பரே .....

பொய்சொல்லவில்லை ....எந்த ஒரு அரசியல் கட்சி கூட்டதிற்கு செல்லும் தொண்டர்கள் எப்படி உற்சாகமாக இருப்பார்கள் ...அது போன்று தான் இருக்கிறார்கள் ...

எந்த அரசியல் கட்சி கூட்டத்துக்கு தொண்டர்கள் இரு சக்கர வாகனத்தில் மூன்று பேராக செல்லவில்லை ???? நாம் போனால் குற்றமா ???

எந்த அரசியல் கட்சி கூட்டத்துக்கு தொண்டர்கள்  வாகனத்தின் மேல்
ஏறி செல்ல வில்லையா???
நாம் சென்றால் மட்டும் குற்றமா ???

எந்த அரசியல் கட்சி கூட்டத்துக்கு தொணடர்கள்  கட்சி கொடியை தலையில் கட்டிசெல்லவில்லை....??? நாம் தலையில் மஞ்சள் துண்டு கட்டினால் கையில் மஞ்சள் ரிப்பன் கட்டினால் குற்றமா ???

ஆக இரு சக்கர வாகனத்தில் செல்வது , வானில் சத்தமிட்டு செல்வது தலையில் ரிப்பன் கட்டி செல்வது எப்படி குற்றாமாகும் ???

இது மக்கள் கூட்டமாக ஓரிடம் செல்லும்போது இயல்பாக ஏற்படுவது.

வேளாங்கண்ணி நோக்கிவருடம் தோறும்  கிருஸ்துவ பெருமக்கள் கூட்டமாக பாதயாத்திரை செல்லும் போது இந்திய நாடு சமைய சார்பற்ற நாடு அதனால் போது இடத்தில் செல்லும் போது அரசு இது போன்ற கட்டுப்பாடு விதிக்க முடியுமா ???
தேவர்கள்  மீது மட்டும் ஏன் இந்த அடக்குமுறை ....?

அடுத்தாக பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் மூன்று நாள் திருவிழா எனும் போது நான் பார்த்தவரை ஒரு நாளில் 20  லட்சம் மக்கள் கூடி கலைகிறார்கள் ....
மக்கள் நிம்மதியாக தேவரை தரிசிக்க முடியவில்லை ......
ஏன் ???
அரசு எந்திரம் வேறு எந்த விழாவும் நடத்திய தில்லையா ???
ஏன் ???
ஏன் ஒரு கட்டுப்பாடான நிர்வாக செயல்பாடு இல்லை ???
தேவர்களை காட்டுமிராண்டிகளாக மீடியாகளுக்கு சித்தரிக்க
ஒரு வாய்ப்பாக இந்த திருவிழாவை அரசு பயன்படுத்திக்கொள்கிறதா???
அப்படிதான் தெரிகிறது .........

இனி மக்களின் உணர்வுகளை பார்போம் ...

தேவர்களின் உணர்வு படி அவர்கள் ஒரு தலைவனின் விழாவுக்கு செல்லவில்லை .......
ஆம் அவர்கள் விழாவுக்கு செல்லவில்லை ....
அவர்கள் தேவர்களின் தேவனை
தேவ சேனாபதியை
அந்த
கந்தபெருமனை
அவர்களின் கண்ணின் மணியாகிய
அவர்களின் கண்முன் நடமாடிய முருகபெருமனை வழிபட செல்கிறார்கள் ...
அவர்கள் பாண்டிய குலத்தை காத்த தலைவனை காண சென்றார்கள்.

தன்னுடைய சுகங்களை தமக்காக இழந்த திருமகன் வாழும் இடத்துக்கு ......பரம்பரை பரம்பரையாக
நன்றி மறவாத இனத்தை சேர்ந்த அந்த மக்கள் ...
நன்றிகடனாக
செய் நன்றி மறவாத உயர்குணமுடைய தேவர் பெருமக்கள்
தேவரின் திருவடியை சேவிக்க செல்கிறார்கள் ....
அவர்கள் இந்துவாக கிறிஸ்துவராக செல்லவில்லை .......
தேவராக ....
இரத்த  சொந்தத்துக்காக செல்கிறார்கள் ...
அந்த செந்தில் வேலனின் அவதாரத்துக்கு மொட்டை போட்டு  செல்கிறார்கள்..

வந்த உறவுகள் பசியால் வாடிவிட கூடாது என்று
வாண்டையார் , வெள்ளைசாமி தேவர் ,சேதுராமன் ,அரசகுமார் போன்ற மற்றும் பெயர் தெரியாத மூத்த உறவுகள் அன்னமிட்டனர் ..
அன்னமிட்ட கைகளுக்கு தேவர் பெருமக்கள் வாழ்த்துகூறி சென்றனர்.
அவர்கள் இட்ட அன்னத்தின் பெருமையை மனமகிழ்ந்து கூறி
அனைவரும் அனைவரையும் அன்னமுன்ன அழைத்தனர் .

மதுரை தொடங்கி ஊர் எங்கும் தோரணம் ,
தேவர் புகைப்படம் உள்ள வீடு எங்கும் மலர்மணம்,
தெரு எங்கும் தேவர் புகழ் மணக்கும் நாட்டுபுற பாடல்கள் .
,சிலைகள் எங்கும் பால்குடம் .

ஓ இதுதான் தேவலோகமா ?...

காண கண் கோடி வேண்டும் ..
திசை எங்கும் தேவர் புகழ்....

ஊர் எங்கும் பசும்பொன்னுக்கு சென்றீர்களா என ஒருவரை ஒருவர் விசாரிக்கிறார்கள் ..

பெண்மக்கள் , சிறுவர்கள் முதல் பெரியவர் வரை உற்சாமாக பசும்பொன்னை நோக்கி செல்கிறார்கள் ..
செல்லும் வழி எங்கும் மகிழ்ச்சி ஆரவாரம் ...

பசும்பொன் பயணத்தில் நான் கண்டது
அவர்கள் தேவர்கள் முருகனின் அவதார திருநாளை கொண்டாடுகிறார்கள் ...
அவர்கள் கொண்டாடுவதை மற்ற இன மக்களும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார்கள் ......
மூத்தவர்களுடன் உரையாடியதிலிருந்து மற்ற இனமக்கள் தேவர் இருந்தவரை பாதுகாப்பாக இருந்ததாக சொல்கிறார்கள் .......
தேவர் ஒரு தூய்மையான அப்பழுக்கற்ற துறவி என கூறுகிறார்கள் ..
குறள் கூறுகிறது
"அந்தணர் என்போர் அறவோர் "
"அவரவர் எச்சத்தால் காணப்படும் "

புரிந்தவர் புரிந்து கொள்க
 
read more...
ஒரு சாதாரண மனிதனின் பசும்பொன் பயணம்SocialTwist Tell-a-Friend

பசும்பொன்னுக்கு கடுதாசு - 1

1 comments
‘எனது இளைஞர்கள் இரும்பைப் போன்ற தசைகளையும் உருக்கு போன்ற நரம்புகளையும் இடியோசை கேட்டு அஞ்சாத மனவலிமையையும் பெற்று எதற்கும் துணிந்த ஆண்மையிளம் சிங்கங்களாகத் திகழ வேண்டும்’சீக்கியர்களின் 10-வது குரு, குரு கோபிந்த் சிங் அவர்களின் வாக்குதான் அது.‘யாரும் உங்களுக்கு விடுதலையை தட்டில் வைத்துக் கொடுக்க மாட்டார்கள்; அதைப் பெற்றவர்கள், தங்களுடையை சொந்த முயற்சி, துணிவு, உறுதி, வலிமையாலேயே பெற்றார்கள்’




எல்லாருக்கும் வணக்கமுங்க , தேவர் அய்யா உங்களுக்கும் வணக்கமுங்க ...
உள்ளம் உடல் மனம் எல்லாம் ஒன்று பட்ட வாழ்வு உங்களுதுங்க ....
உங்களால மாதிரி மனுசங்க பல்லாயிரம் வருசங்களுக்கு ஒரு முறை தான் பொறப்பு எடுப்பாக ....

அதனால் தான் உங்கள தெய்வமாக மக்கள் கும்பிடுறாங்க ....

ஆனா அய்யா நாஞ் சாதாரண மனுசனுங்க ......
ஆரம்ப காலத்துல உங்கள பத்தி நிறைய தப்பு தப்பா சொன்னாக ....
அதயல்லாம் எல்லோரையும் போல நானும் உண்மையின்னு நம்பிக்கிட்டு இருந்தனுங்க .....
ரொம்ப நாளா மனசுவிட்டு உங்களோட பேசனுமுன்னு தோணிச்சு ...
அதான் அய்யா இந்த கடுதாசு ....

நாஞ் சின்ன வயசா இருக்கும் போது உங்களை பத்தி கேட்டு தெருஞ்சுருகேன் அய்யா ...

ஒங்கள பத்தி பேசும் போது மக்கள் ஒரு சாரர் தெய்வமுன்னு பேசுவாங்க ..
மறு சாரர் சாதி வெறியர் அப்படின்னு பேசுவாங்க அய்யா ...
எது உண்மைன்னு எனக்கு சரியா அந்த வயசுல்ல தெரியல்ல ...
கொஞ்சம் வயசான பிற்பாடு படிக்க ஆரம்பிச்சன் அய்யா
அப்பகூட முழுசா உங்கள பத்தி தெரிஞ்சுக்க முடியல .....
அதுக்கப்புறம் தேடி தேடி நிறைய படிக்க ஆரம்பிச்சன் ...
வரலாறு , பூவியல் ,வானியல் , கணிதம் , தத்துவம் ,மருத்துவம் ,வாணிபம் ன்னு சகல துறைகளையும் படித்த பின்னாடி தான்
உங்க பார்வை எனக்கு புலப்பட ஆரம்பிச்சது ....

*//தமிழகத்தில் அரசியல்வாதிகள் எல்லோரும் அரசியல் தலைவர்களாக இல்லை. அரசியல் வியாபாரிகளாக மாறிவிட்டார்கள்./** ...
அது எப்டிங்க நீங்க அன்னைக்கு சொனீங்க இன்னும் மாறலைங்க ......இது உங்க வார்த்தைங்க.....
நீங்க சொன்ன இன்னும் சில வரிகள பாபோமுங்க ...

**/ இன்றைய தினம் நம் நாட்டு விவசாயிகள் படும் துன்பத்திற்க்கெல்லாம் அடிப்படையான காரணம் நம் நாடு பொருளாதாரப் பிடிப்பு மேலநாட்டானிடம் அகப்பட்டுக் கொண்டது தான்./****

உங்க காலத்துல மட்டுமில்லை இன்னைக்கும் அப்படி தானுங்க ..

அன்னைக்கு வெள்ளைக்காரன் நம்ம நாட்டுக்குள்ள நுழையும் போது மதராஸ்,பாம்பே , கல்கத்தா போன்ற ஊர்களில் தனி கோட்டை கட்டி கொண்டான் .....

இன்னைக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் உருவாக்கி கொண்டங்க ...

அன்னைக்கு நெசவு செய்த மக்களை கட்டை வெரலை வெட்டி நெசவு செய்ய முடியாமல் செஞ்சாங்க .
இன்னைக்கு நாலு வருசத்துக்கு முன்னாடி பேல் கணக்குல பருத்தியை
இந்தியாவுக்கு உள்ள கொண்டு வந்து கொட்டு நானுங்க .
வெளஞ்ச பருத்தியை விற்க முடியாமல் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்கள் .......
இன்னைக்கு நூல்களை மொத்தாமாக கொள்முதல் செய்து நெசவு நிறுவனங்கள் , ஆடை நிறுவனங்களை மூட வைக்கிறார்கள் ...

அன்னைக்கு கப்பல் விட்டதுக்கு வெள்ளைக்காரன் நம்மை தண்டிசான்
இன்னைக்கு மீன் பிடிக்க கூட கடலுக்கு சுதந்தரமாக போக முடியலை .
மீன் பிடிக்க தனி சட்டம் , நடு கடலில் மீன் பிடிக்க அயல் நட்டு நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி , கடற்கரை பகுதில் கால காலமாக வாழும் மக்களிடம் இருந்து நிலத்தை பிடுங்க தனி சட்டம் ..
அய்யா நீங்க நீங்க சொன்னீங்க அன்னைக்கு

**/ இன்றைய தினம் நம் நாட்டு விவசாயிகள் படும் துன்பத்திற்க்கெல்லாம் அடிப்படையான காரணம் நம் நாடு பொருளாதாரப் பிடிப்பு மேலநாட்டானிடம் அகப்பட்டுக் கொண்டது தான்./****

இன்னும் மாறலை ....

இது மொத கடுதாசிங்க இன்னும் நிறைய உங்களோட மனம் விட்டு கடுதாசி அனுப்புறேனுங்க .....
இப்போதைக்கு வணக்கமுங்க

read more...
பசும்பொன்னுக்கு கடுதாசு - 1SocialTwist Tell-a-Friend

மூவேந்தர் யார் ?---------ஒப்புதல் வாக்குமூலம் ---இது ஒரு மீள்பதிவு

1 comments
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் முதலாம் மகனாவான்.அழகன் சீவலவேள் என்ற பெயரினைப்பெற்ற இவன் தனது தந்தையில் நினைவாக தென்காசியில் குலசேகரமுடையார் ஆலயம் அமைத்து விண்ணகரம் ஒன்றினையும் அமைத்தான். சிவனிடன் பக்தியுடைய இம்மன்னன் சிறந்த புலவனும் ஆவான். தமிழில் மிகுந்த பற்றுடன் இருந்த இம்மன்னன் வடமொழியிலும் தேர்ச்சி பெற்றவன் கூர்ம புராணம், வாயுசங்கிதை, காசிகாண்டம், இலிங்க புராணம், நறுந்தொகை ஆகிய நூல்களினை இயற்றிய பெருமையினையும் உடையவனாவான் இம்மன்னன். வடமொழி நூலான 'நைஷதம்' என்னும் நூலினை 'நைடதம்' என மொழி பெயர்த்த ..இவன் வெற்றிவேற்கை எனும் தமிழ் நூலையும் எழுதி உள்ளன்.

வெற்றிவேற்கை எனும் தமிழ் நூல் நீதி நூல் ...அதில் நீதி மட்டும் போதிக்காமல் ஒரு சரித்திர உண்மையையும் கூறி உள்ளார் . அதை காண்போம் .

''இருவர் தம்  சொல்லையும் எழுதரம்  கேட்டே
இருவரும் பொருந்த உரையார் ஆயின்
மனு முறை நெறியின் வழக்கு இழந்தவர்  தம்
மணமுற மருகி நின்று அழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழி வழி ஈர்வதோர் வாள் ஒக்கும்மே.''

பொருள் :வழக்கு தொடுத்தவர் அதனை  மறுப்பவர் இருவர் கூற்றையும்  எழு முறை கேட்டு அவை பொருந்த வராமல்
நீதி முறையாக கிடைக்க வில்லையானால் வழக்கை இழந்தவர் அறம் பிறழா மனதுடன் நின்று அழுத கண்ணீர் அறமுறை பிழையாது நீதி வழங்கும் ஆற்றல் மிக்க தேவர் மூவர் { சேர , சோழ ,பாண்டியர் } காக்கினும் . அந்த கண்ணீருக்கு காரணமானவர் வழி வழி தோன்றும் வாரிசுகளையும் அழிக்கும் வாளாகும்..

இந்த பாடலை இயற்றியவர் ஒரு பாண்டிய மன்னராவார்.
அவர் தேவர் மூவர் என்று சேர , சோழ பாண்டியரை விளித்து இருப்பதால்
மூவரசரும்  தேவர்  அதாவது முக்குலதோர் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் .
எனவே தற்க்காலத்தில் சிலர் மாறுபட கூறி வருவது முக்குலதோர் மீது உள்ள காழ்ப்பு உணர்ச்சியால் என்பதை அறியலாம் ..



இதில்  முறையுறத் தேவர் மூவர் என்பதில்

பொதுவாக முப்பெரும் தேவர் என சிவன் ,திருமால் , பிரமன் இவர்களை குறிப்பிடுவர் ...

மூவர் என்பது தமிழில் பொதுவாக சேர , சோழ ,பாண்டியரை குறிக்கும் .

ஆனால் இதில் முறையுற என்பதை கவனிக்க வேண்டும் . அதாவது நீதி நெறி வழுவாமல் காப்பாற்றுவது அரசர்களை குறிக்கும் ...

எடுத்துக்காட்டாக
"முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு 
இறை என்று வைக்கப்படும் ."
எனும் திருக்குறள் வாயிலாக அறியலாம் .

ஆதலால் இங்கு நீதி நெறியுடன் அரசு நடத்தும் சேர ,சோழ , பாண்டியரை குறிக்கும் என்பதை நன்கு அறியலாம்




எழுதியவர் : அல்லூர் கிழார் : சாமி .கரிகாலன் மற்றும் முகுந்தகுமார்[எ]  மாயதேவர்
read more...
மூவேந்தர் யார் ?---------ஒப்புதல் வாக்குமூலம் ---இது ஒரு மீள்பதிவுSocialTwist Tell-a-Friend

பசும்பொன்--திருவிழா-------- கற்றதும் பெற்றதும்

1 comments
எல்லாச் சொத்தும் களவே’ சோசலிச முன்னோடி புரூதோன். ‘சொத்துரிமைக்கு எதிரான மிகப் பெரிய குற்றம் சொத்தில்லாமல் இருப்பதுதான்’ பிரிட்டிஷ் மார்க்சிய வரலாற்றாசிரியர் இ. பி. தாம்சன்
ஒரு எழுத்தாளரின் அனுபவங்கள்
[1]மொத்தக்கூட்டமும் பொதுவான முறைபப்டுத்தல்கள் இல்லாமல் தன்னிச்சையாக அங்காங்கே சிறு குழுக்களாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள்
மக்களின் பலத்தை எவ்வாறு உறுதி செய்வது? மக்களை எவ்வாறு பலம் மிக்கவர்களாக உருவாக்குவது?? என்பது ஒரு குறிப்பான வேலைத்திட்டம்

[2]தேவர் அச்சாதிக்குள் தன்னை ஒடுக்கிக்கொண்ட ஒரு சாதித்தலைவராக இருக்கவில்லை. அவர் ஒரு தேசியத்தலைவர். ‘தேசியமும் தெய்வீகமும் என் இருகண்கள்’ என்று அறிவித்தவர். அந்தப்புரிதல் அங்கே வந்த மக்கள்திரளுக்கு இருக்கிறதா என்ற ஐயம் ஏற்பட்டது. அந்த திருவிழாவில் எங்குமே தேவர் அவர்களின் கருத்துக்களையும் அரசியல் பணியையும் வாழ்க்கை வரலாற்றையும் விளக்கும் ஒரு நிகழ்ச்சியோ , கண்காட்சியோ , ஏன் அறிவிப்புகளோகூட கண்ணில்படவில்லை. அவரைப்பற்றிய நூல்களோ அவர் ஆற்றிய உரைகளடங்கிய நூல்களோ விற்பனைக்கு வைத்திருக்கவில்லை. ஒரு தலைவரை அவரது கருத்துக்கள் வழியாக மக்கள் அறிவதே முறையானது. அதற்கான வசதிகள் அங்கே செய்யப்படவில்லை.

[3]உருக்கு போன்ற மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்ட மனிதராக அவரைச் சொல்கிறார்கள். அந்தக்கட்டுப்பாட்டை அவரது பிறந்தநாளில் கடைப்பிடித்தல்தான் அவருக்குப் பெருமை சேர்க்கும் என்று பட்டது.

[4]உட்பிரிவுகள் ஊர்ப்பிரிவுகளை எல்லாம் மறந்து மக்கள் ஒருங்கிணைவது மிகச்சிறந்த ஒரு விஷயம்.சரியான வழிகாட்டல் இருந்தால் அம்மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பெறவும், கல்வி தொழில் போன்ற பல துறைகளில் ஒருங்கிணைந்து வெற்றி பெறவும் அந்த மனநிலை உதவக்கூடும். எந்த ஒரு மக்கள் எழுச்சியையும் சரியாக வழிநடத்தினால் ஆக்கபூர்வமான சக்தியாக ஆக்க முடியும். அதைச்செய்யும் தலைவர்கள் அவர்களில் இருந்து உருவாகி
வரவேண்டும்

[5] சாதி என்பது இந்த நாட்டில் உள்ள மக்களின் பழங்குடி வேர். அவர்களின் அடையாளமாக தொன்றுதொட்டு இருந்து வருவது. அந்த அடையாளங்கள் காலப்போக்கில் பலவகையான மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கலாம் என்றாலும் அந்த வேர்ப்பிடிப்பு எப்போதுமே மாறியதில்லை. ஆகவே இன்றும் இந்தியாவின் எந்த ஒரு சாதியப்படிநிலையில் இருப்பவருக்கும் அவரது சுய அடையாளம் சாதியைச் சார்ந்தே உள்ளது

6]மூன்று முக்கியமான குறைபாடுகளைக் கண்டேன். ஒன்று தேவர்களின் உட்பிரிவுகளுக்கு இடையே இன்றும்கூட சரியான புரிந்துணர்வு இல்லை.

இரண்டு, அந்தச் சாதி இன்னமும் ஓர் அமைப்பாக திரளவில்லை. ஆகவே எந்தவகையான கட்டுப்பாடும் இல்லை.

மூன்றாவதாக, அவர்களுக்கு எந்த இலக்கும் இல்லை. எந்த அரசியல் கனவும், எந்த சமூகத்திட்டமும், எந்த பொருளியல் இலக்கும் இல்லை. தன்னிச்சையாகக் கிளம்பி வந்த ஒரு மக்கள்திரளாகவே இருந்தார்கள்.

[7]தேவர்கள் தங்களை உறுதியான இலக்குள்ள அமைப்பாக ஆக்கிக்கொண்டு, சகசாதிகளுடன் இயல்பாக இணைந்துபோய், தங்களுடைய கல்வி மற்றும் தொழில் நலன்களுக்காக சீராக போராடுவார்கள் என்றால் இந்தச் சாதியடையாளம் அவர்களுக்கு ஓர் எல்லை வரை நன்மைபயக்கக் கூடும். இன்றைய கட்டற்ற போக்கையும் சகஜாதிகள் மேல் வெறுப்பையும் அவர்கள் முன்னெடுத்தால் இழப்பு அவர்களுக்கே. தேவர்கள் அல்ல, எவர் நினைத்தாலும் சமூக மாற்றத்தை தடுத்து நிறுத்திவிடமுடியாது. அது காலவெள்ளம்.தேங்கியவர்கள் பின்னுக்குத்தள்ளப்படுவார்கள் என்பதே சமூக இயங்கியலின் விதியாகும்.

[8] நல்ல தலைமை இல்லை. நன்கு கற்றறிந்தவர்கள் அந்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் சாதிய அடையாளங்களைவெறுத்துவிடுகின்றனர். அந்த மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய நினைப்பவர்கள் சில சுயநலவாத பிற்போக்குவாதிகளின் பிடியில் சிக்கிக்கொள்கின்றனர். இந்த இடத்தில் சாதிப்பற்று சாதிவெறியாக மாற்றப்படுகிறது. அதை உணர்ந்து கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு எப்போது ஏற்படும்?

[9]வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் சரியான தலைமை அமைவது மிகச்சிரந்த வாய்ப்பு. அது அடிக்கடி நிகழ்வதில்லை. அவ்வகையில்பார்த்தால் பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களுக்கு ஒரு நல்லூழ். அது அம்மக்களுக்கு தலித்துக்கள் மீதிருந்த விரோதத்தை அழிக்கவும் அவர்களுக்கு உலகியல் சார்ந்த இலக்குகளை வளர்க்கவும் பேருதவி புரிந்திருக்கிறது. அப்படி ஒரு தலைமை தேவர்களுக்கு அமையட்டும் என ஆசைப்ப்படுவோம்
thanks to
திரு. ஜெயமோகன் - எழுத்தாளர்
thanian pandiyan
muthuramalingam
read more...
பசும்பொன்--திருவிழா-------- கற்றதும் பெற்றதும்SocialTwist Tell-a-Friend