வேளம்

சோழர்காலக் கல்வெட்டுகளில்,
இச்சொல் சாதாரணமாகவே தென்படும்.
பெரும்பாலும் 
நிவந்தக் கல்வெட்டுகளில் காணமுடியும்.
வேளம் என்பதற்கான பொருள்,
போகத்திற்காக
பகைவர் நாட்டில் இருந்து கொண்டு வந்த, பொதுமகளிர் வாழும் இடம்
எனத் தவறாகவே புரிந்து கொள்ளப்பட்டு வந்தது
சில ஆய்வாளர்களால்.
பகைவர் நாட்டை வென்றபின்,
ஆநிரை கவர்தலும்,
பெண் கவர்தலும்,
வீரத்திற்குரிய மரபாகவே கருதப்பட்டதால்,
வேளம் என்ற
இச்சொல்லுக்கான பொருள்
இவ்வாறாகத் தோன்றியது போலும்.
இருக்கட்டும்.
இதை விளக்கும் முன்
தஞ்சைப் பெருகரில் இருந்த
வேளங்களின் பெயர்களை,
கல்வெட்டுகள் காட்டுவதை சற்று பார்ப்போம்.
பாண்டி வேளம்.
உய்யங்கொண்டான் வேளம்.
அருமொழி தேவத் தெரிந்த வேளம்.
பஞ்சவன் மகாதேவியார் வேளம்.
உத்தமசீலியார் வேளம்.
உடையார் கோதண்ட வேளம்.
சளுக்கியகுலக் காலத் தெரிந்த வேளம்.
மேற்கண்ட பெயர்களை
சற்று அவதானித்தால் தெரியும்,
இவை எல்லாமே
அரசர், அரசிகளின் பெயர்கள் என்று.
போகத்திற்கான மகளிர் வசிக்கும் இடம்
வேளம் என்றால்,
இப்பெயர்களை வைக்க வாய்ப்பே இல்லை.
மகளிர் இருப்பிடம்தான் வேளம் எனக் கொண்டால், அங்கிருந்து
ஆண்கள் கொடுத்ததாகக் கூட
கல்வெட்டுகள் உண்டு.
ஆக, கல்வெட்டுகளில் காணப்படும்
வேளம் என்ற சொல்,
வசிக்குமிடம், அல்லது இருப்பிடப் பகுதியையே குறிக்குமே தவிர..
பொது மகளிருக்கான இடமல்ல
என்பது தெளிவாகிறது.
மேலும்
இந்த வேளத்தில் வாழ்ந்த பெண்கள்,
அரசர் கொடுக்கும் தானத்தோடு
தாங்களும் கொடுத்துள்ளர்கள்...
பெரிய கோவிலுக்கு கூட
ராஜராஜருடன் சிலர் கொடுத்துள்ளனர்.
இது பற்றிய சில செய்திகள் தஞ்சைக் கோவில் கல்வெட்டுகளிலேயே உண்டு.
எடுத்துக்காட்டாக. ..
வேளத்துப் பெண்டாட்டி வரகுணன் எழுவத்தூர் என்பவர்,
சேனாதிபதியோடு சேர்ந்து 12 பசுக்களை தானமாக அளிக்கிறார்.
இராஜராஜர் 42 பசுக்கள் தரும்போது,
அவருடனேயே இணைந்து 6 பசுக்களை தருகிறாள்.
பெண்டாட்டி" என்பது,
அரசர்க்கும், அரசிக்கும்
ஊழியம் செய்வோர்க்கான பொதுவான பெயர்.
Personal assistant
அது மட்டுமல்ல! ...
இது ஆணுக்கும் பெண்ணுக்கும்
பொதுவான பெயரும் கூட.
நன்றி! . "சோழவழிகாட்டிகள்"
Muniraj Vanathirayar

வேளம்SocialTwist Tell-a-Friend

No comments: