பாதாளகரண்டி

 "பாதாளகரண்டி"
வீட்டுக் கொல்லபுறத்துல
கெணத்த பார்த்த தலைமுறையோடு
இதன் பயன்பாடு இல்லாம போச்சு. 
தஞ்சாவூர் பக்கம்
இத பாதாளகரண்டின்னு சொல்லுவாங்க.

கெணத்துல நீர் இறைக்கும் போது கயிறு அவுந்து இல்ல அறுந்து வாளி தண்ணில விழுந்திடும். உடனே அம்மா அந்த பால்கார பாட்டி வீட்டுக்குபோய் பாதாளகரண்டி வாங்கிட்டு வாடான்னு சொல்லுவாங்க கையோட ஒரு பாத்திரத்த கொடுத்து வாங்கிட்டு வர சொல்லுவாங்க. இது எதுக்குமா பாத்திரம்ன்னு கேட்டா அது சாங்கியம்டான்னு சொல்ல ஒன்னும் வெளங்காம பால்கார பாட்டி வீட்டுக்கு ஓடுவோம் பொழங்க தண்ணி வேணுமே. வளர்ந்தோன தான் தெரிஞ்சுது அது சாங்கியமில்ல பாதாளகரண்டி கேணிக்குள்ள விழுந்துட்டா கைமாத்தா கொடுத்த பாத்திரம் திரும்ப வராதுன்னு. அப்படி இது விழுந்தது போச்சு கத கந்தல் அடுத்து இன்னொரு பாதாளகரண்டிய தேடி ஓடனும் பத்திரத்தோட. அக்கம்பக்கம் வீட்டுக்காரவங்க எல்லோரும் கெணத்த சுத்தி கூடிருவாங்க வேடிக்க பார்க்க.
இதுல சுவாரசியம் என்னனா இத கெணத்துல விட்டு மெதுவா சுத்தி எடுத்தா புதையல் போல எப்பப்போ விழுந்த பொருளெல்லாம் சிக்கும் வீட்டில இருக்கும் பெரியவங்க எல்லோரும் சுத்தி நின்னு இது அப்ப விழுந்தது இது இப்ப விழுந்தது என வியப்பு கலந்த மகிழ்ச்சியோட பேசுவாங்க ஒரே சிரிப்பும் கும்மாளமும் தான். அப்புறம் வாளி அகப்பட்டோன மெதுவா தூக்கணும் சரியா மாட்டலன்னா பாதியில வரும்போது திரும்பி கெணத்துல விழுந்துடும் அதனால பொறுமையா அலுங்காம குலுங்காம தூக்கணும்.
சில நேரம் வெகு நேரமாகியும் வாளி கிடைக்காது இருட்டுறதுக்குள்ள வேற திரும்பி கரண்டிய தந்தினும் இது அடுத்த சாங்கியம். மறுநாள் திரும்ப பாத்திரம் குடுத்து வாங்கிவந்து தேடல் தொடரனும். ஆனா பாதாள கரண்டி வீட்டுக்கு கண்டிப்பா ஏதாவது பொருள கொண்டுவந்து மகிழ்ச்சிய கொடுக்கும் அதுல சந்தேகமே இல்ல.
சொர்க்கபூமி தஞ்சாவூரு
பாதாளகரண்டிSocialTwist Tell-a-Friend

No comments: