பரல்கள்

Arun Senthil
இந்திய ஜோதிடத்தில் பரல்கள்னு ஒரு
கான்செப்ட் உண்டு. ஒரு ஜாதகத்தில்
மொத்த பரல்கள் 337. அது ஆண்டிக்கும்
அதுதான் அரசனுக்கும் அதுதான்.
அந்த 337 பரல்கள் 12 இராசி கட்டங்களில்
பிரித்து நிரப்பபடும். ஒருவருக்கு ஒரு கட்டத்தில்
கூடுதலாகவும் ஒரு கட்டத்தில் குறைவாகவும்
இருக்கலாம்.
நோய் கடனை குறிக்கும் கட்டத்தில் அதிக
பரல் இருந்தால் மற்ற கட்டத்தில் பரல்கள்
குறையும். எப்படி இருந்தாலும் மொத்த பரல்கள்
எல்லா மனிதர்க்கும் ஒன்றுதான்.
அட இந்த ஜோதிடம் கூட மார்க்ஸ், ஏங்கல்ஸ்,
மாவோ, ஸ்டாலின் ஆகியோரெல்லாம் உளறி
திரிந்த கம்யூனிசத்தை விட நேர்மையான
பொதுவுடமையாளனாய் இருக்கிறதே.
இரண்டு கோடி பேரை பலி கொடுத்து மாவோ
உருவாக்கிய கம்யூனிசம் அமெரிக்காவின்
யூஸ் அன் துரோ கலாசாரத்திற்கு முட்டு
கொடுத்து கொண்டிருக்கிறது.
தன் கம்யூனிச அரசில் படை தளபதி , வீரர்கள்
என்ற பேதமே கூடாது என்றெல்லாம்
கற்பனாவாதம் பேசினார் லெனின்.
நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த ஸ்டாலின்
அந்த அரசை காப்பாற்ற அரசை கைப்பற்றி
சர்வாதிகார ஆட்சி நடத்தி அதற்கு பட்டாளி
வர்க்க சர்வாதிகாரம் என்று பெயர் கொடுத்து
ஊரை ஏமாற்றினார்.
முதலாளித்துவம், கம்யூனிசம் இரண்டும்
ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்.
இரண்டுமே மானிடத்திற்கு தீங்கு எனினும்
கம்யூனிசம் கொஞ்சம் கூடுதலாய் கண்டிக்கதக்கது.
ஏனென்றால் இந்த போலி சித்தாந்தத்தை நம்பி
எத்தனையோ வெள்ளை உள்ளம் கொண்டோர்,
ஏழை மனதுக்காரர்கள் தங்கள் வாழ்வை இந்த
மாய மானை துரத்தி கொண்டு போய்
வீணடிக்கிறார்கள்.
பரல்கள்SocialTwist Tell-a-Friend

No comments: