ரீடர்ஸ் டைஜஸ்ட் படிச்சு என்ன பிரயோஜனம்?


சிறுவயது முதல் கண்ணில் பட்ட நூல்களை எல்லாம் படித்துக்கொண்டே இருப்பேன். எட்டாம் வகுப்பில் ரீடர்ஸ் டைஜஸ்ட் அறிமுகமானது. அதன்பின் ஆங்கில நூல்களை படிக்க துவங்கி கோவை பழைய மார்க்கட் சென்று பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட் எல்லாம் வாங்கி வருவேன்.
ஒரு கட்டத்தில் புத்தகம் வாங்க காசு கேட்க கடுப்பான அப்பா "ரீடர்ஸ் டைஜஸ்ட் எல்லாம் படிச்சு என்ன பிரயோஜனம்? பாடபுஸ்தகம் படிச்சாலாவது பிரயோஜனம் உண்டு" என திட்டினார். அதற்கு என்ன பதில் சொல்வது என அப்ப தெரியவில்லை.
ஆனால் இப்போது யோசித்து பார்த்தால் நான் இந்தியாவில் படித்த பிகாம், எம்பிஏ இரண்டிலும் அந்தந்த பாடதிட்ட நூல்களை தாண்டி வேறு எதையும் படித்ததில்லை.
அமெரிக்க கல்லூரிகளில் எந்த இளங்கலை பட்டம் படித்தாலும் மாணவர்கள் மியூஸிக், உலக வரலாறு, புகைப்படக்கலை, நாடகம், சைக்காலஜி, சோஷியாலஜி, தத்துவம் என்பது போல ஜெனெரல் எடுகேஷன் கோர்ஸ்களை எடுக்க சொல்கிறார்கள். அந்த கோர்ஸ்கலை ஒரு வருடம் படித்தபின்னர் தான் அந்தந்த துறைசார் பாடங்களையே அவர்கள் படிக்க துவங்குகிறார்கள். நம் ஊரில் மூன்று வருடம் படிக்கும் இளங்கலை வகுப்புகளை அவர்கள் 4 வருடம் படிப்பது இதனால் தான்.
ஹை ஸ்கூல் போனபின்னர் கட்டாயம் ஸ்போர்ட்ஸ் எடுக்கவேண்டும். வருடம் 100 மணிநேரம் தொண்டுநிறுவனங்களில் தன்னார்வலர்களாக பணிபுரியவேண்டும். அது எல்லாம் கல்லூரியில் சேர உதவும். வெறும் மதிப்பெண், சர்ட்டிபிகேட் வைத்துகொண்டிருந்தால் பைசா பிரயோஜனம் இல்லை.
அக்கவுண்டன்சி மாணவர் எதுக்கு மியூசிக் ஆர்ட்ஸ் எல்லாம் படிக்கணும்? கணக்கு போட தெரிந்தால் போதாதா?
போதாது..ஏனெனில் பலதுறைகளில் கிடைக்கும் அறிவுதான் மாணவர்களை முழுமையான மனிதராக மாற்றும். அவர்கள் சிந்தனைதிறன் மேம்படும். கணக்கு மட்டும் போட தெரிந்த மானவன் குமாஸ்தா பொறுப்பை தாண்டி மேலே வரமுடியாது. நல்லதொரு குடிமகனான மட்டுமல்ல நல்லதொரு பணியாளனாக கூட ஆகமுடியாது.
அதனால் உங்கள் குழந்தைகள் பலதரபட்ட நூல்களை படிப்பதை உக்குவியுங்கள். வெளியே விளையாட அனுமதியுங்கள். ஆரோக்கியமான பொழுதுபோக்குகளை நண்பர்களை உருவாக்கிகொடுங்கள். முழுக்க பாடபுத்தகத்தையே மனப்பாடம் செய்யவைத்து அவர்களை இயந்திரம் ஆக்கிவிடாதீர்கள். பாடபுத்தகம், படிப்பை தாண்டி கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது
Neander Selvan
ரீடர்ஸ் டைஜஸ்ட் படிச்சு என்ன பிரயோஜனம்?SocialTwist Tell-a-Friend

No comments: