நாம் இருவர் நமக்கு மூவர்

நாம் இருவர் நமக்கு ஒருவர் என்பது இனத்தை நேரடியாக குறைப்பது
நாம் இருவர் நமக்கு இருவர் என்பது இனத்தை காலப்போக்கில் குறைப்பது; அதவது விபத்தில் இறப்பு, சிசேரியன், ஓரினசேர்க்கை, லிவிங் டுகெதர் போன்றவைகளால் இனத்தொகை காலப்போக்கில் குறையும்
நாம் இருவர் நமக்கு மூவர் என்பதே இனத்தை பெருக்க அல்லது நிலைக்க வைப்பது
இயன்றவர்கள் இதனை செய்யலாம்; இது நாகரீகத்திற்கு எதிரானது போன்ற எண்ணத்தை உருவாக்கியதே நமக்கு எதிரான முதல் யுத்தம். விழித்துக்கொள்வோம்.

--------------------------------------------------------------------------------------------------------
ஹிந்தியாவிலேயே "மக்கள் தொகை கட்டுப்பாடு" விகிதத்தில் முதல் இடத்திற்கு வந்துவிட்டது தமிழகம். தமிழ் பெண்கள் குழந்தை பெறும் விகிதம் குறைந்துவிட்டது. அதாவது பிறப்பு விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.7 என்று ஆகிவிட்டது. அதாவது இந்த தலைமுறையில் இருபது பேர் இருந்தால் அடுத்த தலைமுறையில் 17 பேர்தான் இருப்பார்கள்.
இது இனவழிப்பன்றி வேறென்ன?
மற்ற மாநிலங்களை விட குடும்பக்கட்டுப்பாடு தமிழகத்தில் தீவிர பிரச்சாரம் செய்யப்படுவது ஏன்?
இதே மற்ற ஹிந்தியர்கள் 2.7 என்ற வகையில் குழந்தை பெறுகிறார்கள்.
அதாவது இந்த தலைமுறையில் 20 பேர் இருந்தால் அடுத்த தலைமுறையில் 27பேர் இருப்பார்கள்.
வடயிந்தியரிலும் குறிப்பாக ஹிந்தி மக்கள் 3.5 என்ற விகிதத்தில் பெருகிவருகின்றனர். அதாவது ஹிந்தி மக்கள் 20 பேர் அடுத்த தலைமுறையில் 35 பேர் ஆவார்கள்.
இதுவே ஹிந்தி மக்கள் மற்ற மாநிலங்களில் பெருமளவு குடியேற வழிவகுக்கிறது.
இன்னும் 6 தலைமுறைகளில் இந்தியா உண்மையிலேயே ஹிந்திநாடு ஆகிவிடும்.
தமிழகத்தினுள் இன்று பல குட்டி ஆந்திராக்களும் சில குட்டி கர்நாடகாக்களும் காணக்கிடைக்கின்றன. அதற்காவது தெலுங்கு ஆட்சி தமிழகம் வரை பரவியிருந்தது காரணமாக இருக்கலாம்.
ஆனால் எந்த வரலாற்றுக் காரணமும் இல்லாமல் ஏற்கனவே தமிழ்நாட்டில் ஒரு கிராமம் விடாமல் மூலை முடுக்கெல்லாம் மார்வாடிகள் குடியேறி உள்ளனர்.
உருது இனத்தவரும் அப்படியே. வட தமிழகத்தில் சௌகார்பேட்டை போன்ற குட்டி ஹிந்தியாக்கள் உள்ளன. தென் தமிழகத்தில் குட்டி மஹாராஷ்ட்ராவும், குட்டி குஜராத்தும், குட்டி சௌராஷ்ட்ராவும் உண்டு. சௌராஷ்ட்ரா இனத்தவர் தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியையே தாய்நிலம் போல ஆக்கிவிட்டனர்.
தற்போது ஹிந்தியர்கள் தமிழகத்தின் சிறுநகரங்கள் வரை குடியேறிவருகின்றனர்.
இப்படியான 'பெருகி- குடியேறி- ஆக்கிரமிக்கும்' திட்டத்தின் மூலமே தமிழகத்தின் வடக்குப் பகுதி தெலுங்கு கன்னடவரால் ஆக்கிரமிக்கப்பட்டது. தென்பகுதி இலங்கையும் இவ்வாறே ஆக்கிரமிக்கப்பட்டது.
சிங்களவரின் மூதாதையருக்கு இலங்கையில் இடம் கொடுத்து குடிவைத்தது தமிழர்கள்.
சிறுபான்மையாக இருந்த சிங்களவர்கள் பெரும்பான்மைத் தமிழர்களை விட அதிக குழந்தைகள் பெற்று பெரும்பான்மை ஆனார்கள். 1700 களில் சிங்களவர் தமிழர்களுக்கு சம எண்ணிக்கைக்கு வந்தனர். தொடர்ந்து தமிழ்நிலத்தில் சிறிது சிறிதாகக் குடியேறி நிலத்தையும் ஆக்கிரமித்தனர்.
இன்று சிங்களவர் பெரும்பான்மை.
இலங்கைத் தீவில் 1/3 பகுதியில் 30லட்சம் தமிழர்கள் வாழ அத்தீவின் 2/3 பகுதியில் ஆறு மடங்கு அதிகமாக ஒன்றரை கோடி சிங்களவர்கள் நெருக்கடித்துக்கொண்டு வாழ்கின்றனர்.
இதனாலேயே தமிழர்களைக் கொன்று விரட்டி அடித்து மேலும் நிலத்தை விழுங்கத் துடியாய்த் துடிக்கிறது சிங்களம்.
சரி நாமும் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாமா?
ஒரு இனத்தின் பலம் அதன் மக்கள்தொகையையே பெரும்பாலும் சார்ந்துள்ளது.
ஆகவே குழந்தை பிறப்பு 2 முதல் 2.5 என்றவகையில் இருக்குமாறு தமிழர்கள் குறைந்தது இரண்டு பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும். எந்தநாட்டில் இருந்தாலும் எவ்வளவு வறுமையில் இருந்தாலும் இதனைச் செய்யவேண்டும். இதனால் மக்கட்தொகை கூடவும் செய்யாது குறையவும் செய்யாது.
அதே நேரத்தில் வேற்றினத்தவர் நம் குடியேறுவதைத் தடுக்கவும் வேண்டும். பஞ்சம் பிழைக்க வந்த ஒரு குடும்பத்தை நாம் இடங்கொடுத்து வாழவைத்தால் அவர்கள் நமக்கு நன்றியுடன் இருப்பார்கள். ஆனால் அவர்களுடைய மகனோ பேரனோ நன்றியுடன் இருக்கமாட்டார்கள்.
அந்தமானில் தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்தபோது வங்கதேச விடுதலை போர் நடந்ததால் வெளியேறிய அகதிகளை அந்தமானில் குடிவைக்க தமிழர்கள் முழு ஆதரவும் கொடுத்தனர். வங்காளிகள் தமிழரை விட பெரும்பான்மை ஆயினர். இதே மலையக அகதிகள் எம்.ஜி.ஆர் காலத்தில் அந்தமானில் குடிவைக்க திட்டமிடப்பட்டபோது கொதித்தெழுந்த வங்காளிகள் பெரும் எதிர்ப்பு தெரிவித்து அதைத் தடுத்து நிறுத்தியதால் வேறுவழியின்றி நீலகிரியில் குடிவைக்கப்பட்டனர்.
வரலாற்றிலிருந்து பாடம் கற்பது அவசியம். இன்று செயாலலிதா, கருணாநிதி போன்ற அகதிகள் தமிழினத்தை ஆள இந்த மண்ணின் மகன் இலங்கை அகதி என்று கொடுமைப்படுத்தப்படும் நிலை. இதற்கு நம் தாராள மனம்தான் காரணம்.
நம் தாய்நிலம் நாளுக்குநாள் சுருங்கிக்கொண்டே வருகிறது. கொழும்பு, கண்டி, கதிர்காமம், அனுராதபுரம், திருவனந்தபுரம், கொல்லம், பாலக்காடு, இடுக்கி, மைசூர், பெங்களூர், கோலார், சித்தூர்,திருப்பதி, நெல்லூர், கடப்பை என தமிழ் நகரங்கள் பறிபோயின.
இன்று தமிழ்த் தாய்நிலத்தின் இதயம் வரை வேற்றின உள்நுழைவுக்கு நடந்தேறி வருகிறது.
வேலியின்றி திறந்து கிடக்கும் நம் வீடு வந்தேறிகளின் வேட்டைக்காடாகி விட்டது.
இன்றைய தமிழகத்திலும் தமிழரை விட அதிகமாக வேற்றினத்தார் வாழும் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஓசூரை ஆந்திரா விழுங்கிவிட்டது. உதகமண்டலத்தை கர்நாடகா விழுங்கவுள்ளது. கோயம்புத்தூரை கேரளா விழுங்கவுள்ளது. கச்சத்தீவு வரை சிங்களவன் விழுங்கிவிட்டான். சிங்களம் திருகோணமலையை கூடியவிரைவில் விழுங்கி வடக்கு கிழக்கைத் துண்டித்துவிடும்.
இனியும் தமிழகத்தில் உள்ள வேற்றினத்தவரை ஆதரிக்கவேண்டாம்.
மும்பையிலும் டெல்லியிலும் குடியேறி வாழும் தமிழர்களை அவ்வவ்வினத்தார் ஆதரிப்பதே இல்லை. அவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூடச் செய்துதரவில்லை.
நாம் திண்ணை வரை கொடுத்தாயிற்று. வீட்டையாவது காப்போம். இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்கும் காலமிது. இனியேனும் விழிப்போம் இருப்பதையாவது காப்போம்.
நாம் இருவர் நமக்கு ஒருவர் என்பது இனத்தை நேரடியாக குறைப்பது
நாம் இருவர் நமக்கு இருவர் என்பது இனத்தை காலப்போக்கில் குறைப்பது; அதவது விபத்தில் இறப்பு, சிசேரியன், ஓரினசேர்க்கை, லிவிங் டுகெதர் போன்றவைகளால் இனத்தொகை காலப்போக்கில் குறையும்
நாம் இருவர் நமக்கு மூவர் என்பதே இனத்தை பெருக்க அல்லது நிலைக்க வைப்பது
இயன்றவர்கள் இதனை செய்யலாம்; இது நாகரீகத்திற்கு எதிரானது போன்ற எண்ணத்தை உருவாக்கியதே நமக்கு எதிரான முதல் யுத்தம். விழித்துக்கொள்வோம்.
தனக்குப் போகத்தான் தானமும் தர்மமும்
நாம் இருவர் நமக்கு மூவர்SocialTwist Tell-a-Friend

No comments: