மூவேந்தர் யார் ?---------ஒப்புதல் வாக்குமூலம் ---இது ஒரு மீள்பதிவு

1 comments
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் முதலாம் மகனாவான்.அழகன் சீவலவேள் என்ற பெயரினைப்பெற்ற இவன் தனது தந்தையில் நினைவாக தென்காசியில் குலசேகரமுடையார் ஆலயம் அமைத்து விண்ணகரம் ஒன்றினையும் அமைத்தான். சிவனிடன் பக்தியுடைய இம்மன்னன் சிறந்த புலவனும் ஆவான். தமிழில் மிகுந்த பற்றுடன் இருந்த இம்மன்னன் வடமொழியிலும் தேர்ச்சி பெற்றவன் கூர்ம புராணம், வாயுசங்கிதை, காசிகாண்டம், இலிங்க புராணம், நறுந்தொகை ஆகிய நூல்களினை இயற்றிய பெருமையினையும் உடையவனாவான் இம்மன்னன். வடமொழி நூலான 'நைஷதம்' என்னும் நூலினை 'நைடதம்' என மொழி பெயர்த்த ..இவன் வெற்றிவேற்கை எனும் தமிழ் நூலையும் எழுதி உள்ளன்.

வெற்றிவேற்கை எனும் தமிழ் நூல் நீதி நூல் ...அதில் நீதி மட்டும் போதிக்காமல் ஒரு சரித்திர உண்மையையும் கூறி உள்ளார் . அதை காண்போம் .

''இருவர் தம்  சொல்லையும் எழுதரம்  கேட்டே
இருவரும் பொருந்த உரையார் ஆயின்
மனு முறை நெறியின் வழக்கு இழந்தவர்  தம்
மணமுற மருகி நின்று அழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழி வழி ஈர்வதோர் வாள் ஒக்கும்மே.''

பொருள் :வழக்கு தொடுத்தவர் அதனை  மறுப்பவர் இருவர் கூற்றையும்  எழு முறை கேட்டு அவை பொருந்த வராமல்
நீதி முறையாக கிடைக்க வில்லையானால் வழக்கை இழந்தவர் அறம் பிறழா மனதுடன் நின்று அழுத கண்ணீர் அறமுறை பிழையாது நீதி வழங்கும் ஆற்றல் மிக்க தேவர் மூவர் { சேர , சோழ ,பாண்டியர் } காக்கினும் . அந்த கண்ணீருக்கு காரணமானவர் வழி வழி தோன்றும் வாரிசுகளையும் அழிக்கும் வாளாகும்..

இந்த பாடலை இயற்றியவர் ஒரு பாண்டிய மன்னராவார்.
அவர் தேவர் மூவர் என்று சேர , சோழ பாண்டியரை விளித்து இருப்பதால்
மூவரசரும்  தேவர்  அதாவது முக்குலதோர் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் .
எனவே தற்க்காலத்தில் சிலர் மாறுபட கூறி வருவது முக்குலதோர் மீது உள்ள காழ்ப்பு உணர்ச்சியால் என்பதை அறியலாம் ..



இதில்  முறையுறத் தேவர் மூவர் என்பதில்

பொதுவாக முப்பெரும் தேவர் என சிவன் ,திருமால் , பிரமன் இவர்களை குறிப்பிடுவர் ...

மூவர் என்பது தமிழில் பொதுவாக சேர , சோழ ,பாண்டியரை குறிக்கும் .

ஆனால் இதில் முறையுற என்பதை கவனிக்க வேண்டும் . அதாவது நீதி நெறி வழுவாமல் காப்பாற்றுவது அரசர்களை குறிக்கும் ...

எடுத்துக்காட்டாக
"முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு 
இறை என்று வைக்கப்படும் ."
எனும் திருக்குறள் வாயிலாக அறியலாம் .

ஆதலால் இங்கு நீதி நெறியுடன் அரசு நடத்தும் சேர ,சோழ , பாண்டியரை குறிக்கும் என்பதை நன்கு அறியலாம்




எழுதியவர் : அல்லூர் கிழார் : சாமி .கரிகாலன் மற்றும் முகுந்தகுமார்[எ]  மாயதேவர்
read more...
மூவேந்தர் யார் ?---------ஒப்புதல் வாக்குமூலம் ---இது ஒரு மீள்பதிவுSocialTwist Tell-a-Friend

பசும்பொன்--திருவிழா-------- கற்றதும் பெற்றதும்

1 comments
எல்லாச் சொத்தும் களவே’ சோசலிச முன்னோடி புரூதோன். ‘சொத்துரிமைக்கு எதிரான மிகப் பெரிய குற்றம் சொத்தில்லாமல் இருப்பதுதான்’ பிரிட்டிஷ் மார்க்சிய வரலாற்றாசிரியர் இ. பி. தாம்சன்
ஒரு எழுத்தாளரின் அனுபவங்கள்
[1]மொத்தக்கூட்டமும் பொதுவான முறைபப்டுத்தல்கள் இல்லாமல் தன்னிச்சையாக அங்காங்கே சிறு குழுக்களாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள்
மக்களின் பலத்தை எவ்வாறு உறுதி செய்வது? மக்களை எவ்வாறு பலம் மிக்கவர்களாக உருவாக்குவது?? என்பது ஒரு குறிப்பான வேலைத்திட்டம்

[2]தேவர் அச்சாதிக்குள் தன்னை ஒடுக்கிக்கொண்ட ஒரு சாதித்தலைவராக இருக்கவில்லை. அவர் ஒரு தேசியத்தலைவர். ‘தேசியமும் தெய்வீகமும் என் இருகண்கள்’ என்று அறிவித்தவர். அந்தப்புரிதல் அங்கே வந்த மக்கள்திரளுக்கு இருக்கிறதா என்ற ஐயம் ஏற்பட்டது. அந்த திருவிழாவில் எங்குமே தேவர் அவர்களின் கருத்துக்களையும் அரசியல் பணியையும் வாழ்க்கை வரலாற்றையும் விளக்கும் ஒரு நிகழ்ச்சியோ , கண்காட்சியோ , ஏன் அறிவிப்புகளோகூட கண்ணில்படவில்லை. அவரைப்பற்றிய நூல்களோ அவர் ஆற்றிய உரைகளடங்கிய நூல்களோ விற்பனைக்கு வைத்திருக்கவில்லை. ஒரு தலைவரை அவரது கருத்துக்கள் வழியாக மக்கள் அறிவதே முறையானது. அதற்கான வசதிகள் அங்கே செய்யப்படவில்லை.

[3]உருக்கு போன்ற மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்ட மனிதராக அவரைச் சொல்கிறார்கள். அந்தக்கட்டுப்பாட்டை அவரது பிறந்தநாளில் கடைப்பிடித்தல்தான் அவருக்குப் பெருமை சேர்க்கும் என்று பட்டது.

[4]உட்பிரிவுகள் ஊர்ப்பிரிவுகளை எல்லாம் மறந்து மக்கள் ஒருங்கிணைவது மிகச்சிறந்த ஒரு விஷயம்.சரியான வழிகாட்டல் இருந்தால் அம்மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பெறவும், கல்வி தொழில் போன்ற பல துறைகளில் ஒருங்கிணைந்து வெற்றி பெறவும் அந்த மனநிலை உதவக்கூடும். எந்த ஒரு மக்கள் எழுச்சியையும் சரியாக வழிநடத்தினால் ஆக்கபூர்வமான சக்தியாக ஆக்க முடியும். அதைச்செய்யும் தலைவர்கள் அவர்களில் இருந்து உருவாகி
வரவேண்டும்

[5] சாதி என்பது இந்த நாட்டில் உள்ள மக்களின் பழங்குடி வேர். அவர்களின் அடையாளமாக தொன்றுதொட்டு இருந்து வருவது. அந்த அடையாளங்கள் காலப்போக்கில் பலவகையான மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கலாம் என்றாலும் அந்த வேர்ப்பிடிப்பு எப்போதுமே மாறியதில்லை. ஆகவே இன்றும் இந்தியாவின் எந்த ஒரு சாதியப்படிநிலையில் இருப்பவருக்கும் அவரது சுய அடையாளம் சாதியைச் சார்ந்தே உள்ளது

6]மூன்று முக்கியமான குறைபாடுகளைக் கண்டேன். ஒன்று தேவர்களின் உட்பிரிவுகளுக்கு இடையே இன்றும்கூட சரியான புரிந்துணர்வு இல்லை.

இரண்டு, அந்தச் சாதி இன்னமும் ஓர் அமைப்பாக திரளவில்லை. ஆகவே எந்தவகையான கட்டுப்பாடும் இல்லை.

மூன்றாவதாக, அவர்களுக்கு எந்த இலக்கும் இல்லை. எந்த அரசியல் கனவும், எந்த சமூகத்திட்டமும், எந்த பொருளியல் இலக்கும் இல்லை. தன்னிச்சையாகக் கிளம்பி வந்த ஒரு மக்கள்திரளாகவே இருந்தார்கள்.

[7]தேவர்கள் தங்களை உறுதியான இலக்குள்ள அமைப்பாக ஆக்கிக்கொண்டு, சகசாதிகளுடன் இயல்பாக இணைந்துபோய், தங்களுடைய கல்வி மற்றும் தொழில் நலன்களுக்காக சீராக போராடுவார்கள் என்றால் இந்தச் சாதியடையாளம் அவர்களுக்கு ஓர் எல்லை வரை நன்மைபயக்கக் கூடும். இன்றைய கட்டற்ற போக்கையும் சகஜாதிகள் மேல் வெறுப்பையும் அவர்கள் முன்னெடுத்தால் இழப்பு அவர்களுக்கே. தேவர்கள் அல்ல, எவர் நினைத்தாலும் சமூக மாற்றத்தை தடுத்து நிறுத்திவிடமுடியாது. அது காலவெள்ளம்.தேங்கியவர்கள் பின்னுக்குத்தள்ளப்படுவார்கள் என்பதே சமூக இயங்கியலின் விதியாகும்.

[8] நல்ல தலைமை இல்லை. நன்கு கற்றறிந்தவர்கள் அந்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் சாதிய அடையாளங்களைவெறுத்துவிடுகின்றனர். அந்த மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய நினைப்பவர்கள் சில சுயநலவாத பிற்போக்குவாதிகளின் பிடியில் சிக்கிக்கொள்கின்றனர். இந்த இடத்தில் சாதிப்பற்று சாதிவெறியாக மாற்றப்படுகிறது. அதை உணர்ந்து கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு எப்போது ஏற்படும்?

[9]வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் சரியான தலைமை அமைவது மிகச்சிரந்த வாய்ப்பு. அது அடிக்கடி நிகழ்வதில்லை. அவ்வகையில்பார்த்தால் பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களுக்கு ஒரு நல்லூழ். அது அம்மக்களுக்கு தலித்துக்கள் மீதிருந்த விரோதத்தை அழிக்கவும் அவர்களுக்கு உலகியல் சார்ந்த இலக்குகளை வளர்க்கவும் பேருதவி புரிந்திருக்கிறது. அப்படி ஒரு தலைமை தேவர்களுக்கு அமையட்டும் என ஆசைப்ப்படுவோம்
thanks to
திரு. ஜெயமோகன் - எழுத்தாளர்
thanian pandiyan
muthuramalingam
read more...
பசும்பொன்--திருவிழா-------- கற்றதும் பெற்றதும்SocialTwist Tell-a-Friend

நமது பணிகள்

3 comments
“உணவுப் பாதுகாப்பு என்பது வெறும் உற்பத்தி மட்டுமல்ல, அது ஊட்டமுடைய உணவு உற்பத்தியாகவும் (Nutrition Security) இருக்க வேண்டும்” இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்





நாம் நமது சமுகத்துக்கு செய்ய வேண்டிய பணிகள் என்ன ?



வேலை வாய்ப்பு


கல்வி


வாழ்க்கை தரம் மேம்படுத்தல் ........

இந்த மூன்றும் மிக முக்கிய செயல் ஆகும் ....



1 )வேலை வாய்ப்பு

2009 டிசம்பர் வரை 13 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 3 உறவுக்கு

வேலை வாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது . மற்றும் 10 உறவுகளுக்காக தொடர் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது .

வேலை வேண்டுவோர் தகவல் வங்கி ஆரம்பிக்கலாம் என ஒரு திட்டம் உள்ளது.

வேலை வாய்ப்பு உருவாக்கவும் , அதிக நபர்கள் பயன் பெறவும், படிப்பு அறிவற்ற , விவசாயம் செய்து கொண்டு இருக்கும் .நபர்கள் பயன் பெறவும். தொழில் அதிபர்கள், பயன் பெறவும்.

தக்க திட்டங்கள் வகுக்க பட்டு வருகிறது.

வேலை தேடும் நிலை மாறி உலகுக்கு வேலை தரும் சமுதாயமாக மாற்ற முயற்சிக்க வேண்டும் .



2 ) கல்வி

முன்பு இது குறித்து http://mayadevar.blogspot.com/2009/06/blog-post.html பதிவில் உள்ளது.

காமிக்ஸ் , அனிமேஷன் வடிவங்களில் நமது வரலாற்று பதிவர்களை பதிவு செய்ய வேண்டும்.



3 )வாழ்க்கை தரம் மேம்படுத்தல் ........

அனைவருக்கும் வாழ்க்கை பாதுகாப்பு ,

இடுக்கண் களைதல்

தொழில் உதவி

பொருளாதார உதவி

வீடு , வாகனம் , கல்வி , பொழுதுபோக்கு போன்று அனைத்து

உதவிகளையும் செய்யும் அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

இதற்க்கு தேவை


பொருள் வளமும் , உழைக்கும் மக்களும் தான்


உறவுகளுக்கு செய்ய யார் ? வரப்போகிறீர்கள் ?
read more...
நமது பணிகள்SocialTwist Tell-a-Friend

சேற்றில் முளைத்த ..........

0 comments
சேற்றில் முளைத்த ..........


பொதுவாக இந்தியாவில் தாமரை என்பது ஞானத்தின் சின்னம் ....
தெளிந்த பேரறிவின் குறியீடு ...

ரிஷி மூலம் , நதி மூலம் பார்க்கக்கூடாது என்பார்கள் .....
அவை மிக சாதரணமாக தான் இருக்கும் ...

அது போன்றே தாமரை சேற்றில் முளைப்பது ...
தாமரை மலரின் வெளி வட்ட இதழ்கள் .....
சேற்றில் முளைத்த காரணத்தால் அழுக்காகவே இருக்கும் ..
ஆனால் தாமரை மலரின் மைய வட்ட இதழ்கள் ..துய்மையாக ...இருக்கும் ....
அதன் தெளிவு என்பது பேரறிவின் குறியீடு .....




சந்தனம் காட்டில் விளையும்

முத்து கடலி விளையும்


நற்குண மக்கள் எங்குஇருந்தாலும் நாம் தான் தேடி எடுத்து கொள்ள வேண்டும் ... குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
read more...
சேற்றில் முளைத்த ..........SocialTwist Tell-a-Friend

பணத்தை இலக்காக வைக்கும் கல்வி தேவையா?

1 comments
“கடலுக்குப் பயந்தவன் கரையில் நின்றான் ....................அதை படகினில் கடந்தவன் உலகை கண்டான்

சுமார் 62 ஆண்டுகள் விடுதலை பெற்று ஆகிவிட்டது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்

நோக்கமாக இருந்த்து. அடிபடையும் இதுவாகத்தான் இருக்கும்.

ஆனால் நிலை ?

வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களின் நிலை அப்படியே தான் உள்ளது.எண்ணிக்கை மட்டும் கூடிக்கொண்டே இருக்கிறது. சமூக பொருளாதார நிலை மேன்பாடு அப்படியேதான் உள்ளது.

கல்வி பொதுவானதாக இல்லை.

பணம் உள்ளோருக்கு ஒரு கல்வியும் இல்லாத வறிய மக்களுக்கு ஒருவிதக்கல்வியும் வழங்கும் அமைப்பாகவே உள்ளது. 35 விழுக்காட்டுக்கு குறைவாகவே கிராமப்புற மாணவர்கள் தொழில் நுட்ப கல்வியை பெற்றுள்ளதாக அரசு புள்ளிவிரங்கள் கூறுகிறது. 90 விழுக்காடு உள்ள மக்கள் சமூதாயத்துக்கு 35 விழுக்காட்டுக்கு குறைவாக வழங்குவது கிடைப்பது வெட்கக்கேடான செய்தியாகும்.

ராஜீவ் ஆட்சிக்காலத்திலும் புதிய கல்விக் கொள்கையிலும் நவோதயா கல்வி என்று அறிமுகப்படுத்த திட்டங்கள் தீட்டப்பட்ட்து. மாவட்டத்திற்கு ஒரு பள்ளி என அமையவிருந்த பள்ளியில் நீச்சல் குளம், கணினி, தொழில் நுட்ப பாட்த்திட்டம் ஊடான கல்வி என்று அவர் கொண்டு வர முணைந்தார். அதில் யார் பலன் பெற்று இருப்பார்கள் ? உயர் சாதியினர், வசதியில் மேல் நிலையில் உள்ளோரே பயன் பெற்று இருப்பார்கள். மக்களின் கடும் எதிர்ப்பால் இங்கு செயல் படுத்தவில்லை.

அரசுக் கல்வி கேவலமானதா ?

என் மகனை 10 ஆண்டுகளுக்கு முன் கிராமம் சார்ந்த அரசுப்பள்ளியில் சேர்க்கச் சென்றேன். அங்கு பணியாற்றிய ஆசிரியை “ இதைவிட நல்லப்பள்ளி வேறு இருப்பதாகவும் இங்கு வேண்டாம் என்றும் எனக்கு அறிவுறுத்தினார்.

இதைக்கண்டு நான் அதிர்ந்து போனேன். அவர் சொன்னது அருகில் இருந்த ஒரு தனியார் பள்ளி காண்வெண்ட் ஆகும்.கிராமப்பகுதியில் உள்ள அப்பள்ளியில் நடுத்தர வகுப்பை சார்ந்த எனது மகனை சேர்ப்பதை அவர் விரும்பாதது அவரின் குறையல்ல. ஏனென்றால் அரசுப்பள்ளியில் படிப்பது இழிவானதாக கேவலமானதாக ஆகிவிட்டது.. ஆனால் என் மகன் அப்பள்ளியில் சேர்த்து இப்போதும் அரசு பாடத்திட்டம் உள்ள அரசுப்பள்ளியில் தமிழ் பயிற்று மொழியாகவே படித்து வருகிறான் என்பதை நான் இங்கு பதிவு செய்கிறேன்

ஆசிரியரும் ஒரு காரணமே!

அரசுப்பணியில் அவர் பணியாற்றுவார். ஊதியம் வாங்குவார். ஆனால் அவர் பிள்ளைகளை பக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் பணம் கொடுத்து படிக்க வைப்பார். தமிழகத்தில் இந்நிலை 100க்கு 90 விழுக்காடுக்கு குறைவில்லாமல் இருக்கும். இப்படி இருந்தால் கல்வி நிலை எப்படி மேம்படும். கல்வியின் தரம் முரண் இங்கேயே தோன்றுகிறது. மாத ஊதியம் இங்கே பெற்றுதனியார் பள்ளியில் படிக்கவைப்பது அரசுப்பள்ளியில் படிக்க வைப்பதிலேயே அவர் பணியாற்றும் கல்வியின் தரம் கீழே செல்கிறது.


கல்வியில் பலவிதம்

அரசுப்பள்ளிகள் ஒருபக்கம் மெட்ரிக்குளேசன், மற்றொரு பக்கம் ஆங்கிலவழிப்பள்ளிகள்,சிபிஎஸ்இ என்ற பிரிவுகள் பணம் செலவுக்கு ஏற்ப கிடைக்கும்.

அப்பாவும் அம்மாவும் ஏதாவது டிகிரி படித்து இருந்தால் மட்டுமே சேர்க்கைத்தரும் பள்ளிகளும் உள்ளது.

தமிழே படிக்காமல்...

தமிழ்நாட்டில் மட்டும் ஒருவர் தமிழை பயிலாமலேயே பட்டம் வாங்கலாம். வேலையும் வாங்கலாம். தமிழைத்தாய் மொழியாக படித்தவன் நிலை கானல் நீரே!

தமிழ் மீடியம் என்ற ஏளனம். கிண்டல் .

சிறப்பு பொருளாதார மண்டலம் காட்டும் படிப்பினைகள்.

சிறப்பு பொருளாதார மண்டங்கள் பல இடங்களில் ஆரம்பிக்கப்பட்டு பன்னாட்டு நிறுவனங்கள் பெரிய பெரிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக பல ஆயிரம் நிலங்களை அரசு கையகப்படுத்தி தருகிறது. நிலம் கொடுத்தவனுக்கு வேலை உத்திரவாதம் பெயருக்குத்தான். தொழில் நுட்ப கல்வி இல்லாத கிராமமக்கள் போட்டிப்போடும்

போட்டிப்போடும் வேலை எது தெரியுமா? பெருக்குதல், கக்கூஸ் கழுவுதல், செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற... கல்வியின் நிலை இதுதான்.

அந்த ஏழை உழவனுக்கு என்ன தரப்போகிறது இந்த சிறப்பு பொருளாதாரமண்டலம்?.

சமூக சமமிண்மையே கலகத்திலேயே முடியும்.

சமச்சீர் கல்வி அனைத்து அரசியல் கட்சிகள் பொது நலன் கருதி ஆதரிக்க வேண்டும்.சமச்சீர் கல்வித்திட்டம் எல்லாவற்றையும் மாற்றிவிடாது ? ஆனால் சமூக இணக்கத்திற்கு ஒரு நல்ல துவக்கமாக இருக்கும். தவறுகளை திருத்துவோம். கல்விதிட்டத்தை மேம்படுத்து வோம்.

சமூக முரண் என்றுமே அமைதியாக இருக்காது. அது போல சமச்சீர் கல்வி தேவை நாடு வளர, மேம்பட சமச்சீர் கல்வியே அவசியம்.

வழக்குப்போடும் தனியார் கல்வி நிறுவனங்கள்.

பணமுதலீட்டை முதன்மை படுத்தும் இவர்களுக்கு வயிற்றை கலக்குகிறது. சமூக மேம்பாடு என்றல்லாம் இவர்களுக்கு நோக்கமில்லை. பணமே இலக்கு. இலாபமே குறிகோள். கல்வி இரண்டாம் நிலையே. நடுத்தர மக்களை கையில் வைத்துக்கொண்டு கிளர்ச்சியில் ஈடுபட திட்டம் தீட்டி இருக்கிறார்கள்.

இதை எதிர்த்து போராட அனைத்து கட்சிகளுக்கும் பொறுப்பு இருக்கிறது. ஊடகங்களுக்கு சமூகக் கடமை இருக்கிறது.

மக்களுக்கான கல்வி திட்டம்.

மாற்றுக் கல்விதிட்டம் அவசியம். மெகாலே கல்வி திட்டத்தை வீட்டுக்கு அனுப்புவோம்.

அனைவருக்குமான கல்வி தாய்மொழியில் கிடைக்க வேண்டும்.

தாய்மொழியில் படித்தவர்களுக்கு வேலையில் முன்னுரிமை போன்ற செயல் பாடு தொடர்ச்சியாக நடை பெற்றால் தமிழ்ச்சமூகம் மேம்படும்.

இன்னொரு ஜப்பானை தமிழகத்தில் உருவாக்கும் நிலை தூரத்தில் இல்லை. இதற்கு சமச்சீர்கல்வி உதவி செய்யும்.

thanks http://anjaan1.blogspot.com/2009/09/blog-post_08.html










read more...
பணத்தை இலக்காக வைக்கும் கல்வி தேவையா?SocialTwist Tell-a-Friend

DEVAR'S media

2 comments
சாதிகள் உள்ளதடி பாப்பா.... குல தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் ............அடக்க முடையார் அறிவிலரென் றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்தலையில் ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும் வாடி நிற்குமாம் கொக்கு.........."நாங்கள் இந்த உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கின்ற ஒரு சாதாரண சிறிய மக்கள் குழு அல்ல; நாங்கள் இந்த உலகின் மிகப் பழமையான - உயர் பண்புகளை உடைய - சுயமரியாதை மிக்க - - ஒரு மிகப் பெரிய தேசிய மக்கள் இனம்."






MAKING CHANGE


DEVAR'S our media influence is too........low


media's are launch wrong openion ........about DEVAR's to this society..


how can we clear this path....so .......?????

do this fast..................


இவ்வாறான தருணத்தில் நாம் இவ்வூடகங்களோடு இணைந்து பணியாற்றுவது மிகவும் அவசியமாகின்றது. இப்பணி மிகவும் விசாலமானது. இதற்கு ஊடகத்துறையில் ஆர்வம் உள்ளவர்கள் மற்றும் இத்துறையில் துறை சார்ந்த நிபுணர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாகின்றது. ( like ...visual communitions) இப் பாரிய பணியை செவ்வனே செய்வதற்கு பல தேர்ச்சி பெற்ற ஊடகவியளார்களையும் ஆர்வம் உள்ளவர்களையும் அறிமுகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.


1) உள்ளூர் மற்றும் பிரதான ஊடங்களுடன் உறவை வளர்ப்பது.


2) தமிழ் , ஆங்கில மற்றும் சகலமொழி ஊடகங்களிற்க்கு செய்தி வழங்குவது.


3) தமிழ் ஆங்கில மற்றும் சகல மொழிகளில் மொழிபெயர்த்தல் மற்றும் தட்டச்சு செய்தல்.


4) தமிழ், ஆங்கில மற்றும் சகல மொழிகளிலும் உள்ள ஊடகவியளார்களுடன் நட்புறவை வளர்த்தல்.


5) தமிழ், ஆங்கில மற்றும் சகலமொழி ஊடகங்களில் வரும் தகவல்களுக்கு அபிப்பிராயம் எழுதுவது.


6) தமிழ், ஆங்கில மற்றும் சகலமொழி ஊடகங்களிற்க்கு கட்டுரை வரைவது.

7) இணையத்தளத்தில் பதிவேற்றுதல்.


8) உங்களுக்கு தெரிந்த ஊடகவியளார்களின் தொடர்பை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுதல்.


9) இளம் ஊடகவியளாளர்களை வளர்த்தெடுக்குமுகமாக பயிற்சிப்பட்டறைகளை நடாத்தக்குடியவர்கள்


மேற்குறிப்பிட்டவற்றில் எத்துறையிலேனும் தேர்ச்சி மற்றும் ஆர்வம் உள்ளோர் உங்கள் சுயவிபர கோர்வையுடன் (curriculum vitae) உடனே எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள்.
தொடர்புகட்க்கு:-mayadevar77@gmail.com

thanks for this idea : athirvu.com






read more...
DEVAR'S mediaSocialTwist Tell-a-Friend

அடிப்படை கட்டமைப்புகள்

1 comments
சமூகத்தின் மூன்று அடிப்படை உரிமைகள்



சமூக உரிமை (சமூகத்தில் மதிப்பு போன்றவை )

பொருளாதர உரிமை (பொருளாதர வளர்ச்சி ,பொருளாதர சுதந்திரம் போன்றவை )

அரசியல் உரிமை (அரசியல் அதிகாரத்தில் கௌரவமான பங்கு போன்றவை )


சமூகத்தின் ஆறு அடிப்படை கட்டமைப்புகள்



மொழி (சமூகத்துக்கான மொழியடையாளம், தங்கள் குழந்தைகள் என்ன கற்ற போதிலும் கண்டிப்பாக தங்களின் மொழியைக் கற்க வேண்டும், மொழி தங்களின் அடையாளம். தங்கள் இனத்திற்கான குறியீடு )



மதம் (சமூகத்துக்கான சிறப்பு பாரம்பரிய ஆன்மீக வழிமுறை )



வரலாறு (சமூகத்தின் வரலாற்றை எழுதி குழந்தை முதல பெரியவர் வரை அறிய செய்தல் ,{தங்கள் இனத்தின் வரலாற்றினை, பெருமிதம் பொங்கவும், தங்கள் இனம் சந்தித்த அவலங் களை மறைக்காமலும் தங்களின் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தனர். வரலாற்றினை அறியாமல் உணர் வூட்ட இயலாது}வரலாற்று அறிவு மிக முக்கியமானது. அதுவே நாட்டின் மீதான பற்றையும் இனத்தின் மீதான அக்கறையையும் ஏற்படுத்தும். )



பொருளாதாரம் (பொருளாதார வளர்ச்சிக்கான கட்டமைப்புகளை உருவாக்குதல் (பொருளாதார ரீதியாக தங்களை மிக அழுத்தமாக வளர்த்துக் கொண்டனர். எந்த நாட்டில் வாழ்ந்தாலும், அந்நாட்டின் பொருளாதாரத்தில் யூதர் களுக்கு மிக முக்கியப் பங்கு இருந்தது. கடும் உழைப் பின் மூலமும் திட்டமிடுதல் மூலமும் இதனை அவர்கள் சாதித்தனர். ))



கல்வி (சகல தொழில் நுட்பத்திலும் முன்னேரிய கல்வி முறையை உருவாக்குதல் )



அதிகாரம் (அதிகாரத்துக்கு அருகில் இருத்தல்{தங்களின் பொருளாதார நிலையினைக் கொண்டு தாங்கள் வாழும் நாட்டின் அதிகார வர்க்கத்தின் நட்பைப் பெற்றனர். அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமல்லாது அதிகாரத்திலும் செல்வாக்குப் பெற்றவர்களாக மாறினர். } )



"உலகின் எந்த மூலையில் வாழும் யூதன் ஆனா லும், அவனுடைய வாழ்க்கைச் சூழல் எதுவாக இருந் தாலும், அவனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் எத்த கையதாக இருந்தாலும், ஒன்றில் அவர்கள் ஒத்த கருத் தினை- உறுதியான கருத்தினைக் கொண்டிருந்தனர்."


"உலகெங்கும் பல நாடுகளில் வாழும் யூத மக்களிடையே ஓர் அடிப்படை ஒருங் கிணைவை ஏற்படுத்தினர். ஒவ்வொருவருக்கும் ஒவ் வொரு கருத்து இருக்கலாம். ஆனால் இலட்சியம் ஒன்றே என்ற அடிப்படையில் இந்த ஒருங்கிணைவு ஏற்படுத்தப்பட்டது. அந்த ஒருங்கிணைவு எத்தனை பலமாக இருந்தது என்றால், உலகெங்கும் இருந்த அத் தனை யூதர்களும், ஒரே திசையில் சிந்தித்தனர். ஒவ்வொரு கட்டத்திலும் ஒரே திசையில் அடியெடுத்து வைத்தனர். " thanks to http://thevarnews.blogspot.com/2009/06/blog-post_17.html (யூத வழியில்)


read more...
அடிப்படை கட்டமைப்புகள்SocialTwist Tell-a-Friend