இராசராச சோழன் கள்ளரே..ஆதாரங்கள் வருமாறு

37 comments
அலையிருக்கும், மலையிருக்கும், காற்றிருக்கும் நாள்வரை மன்னராண்ட மதுரை தஞ்சை காஞ்சியோடு உறந்தையும் மறவர் நாடும் உலகமுற்றும் வாழ்கவாழ்க வாழ்கவே! -----------------------கவிஞர் கண்ணதாசன்


குற்றப்பரம்பரை சட்டம் கொண்டுவருவதற்குமுன்பாக,  
பிரிட்டிசுப் பேரரசு, சுமார் 150 ஆண்டுகளுக்குமுன், டொணமூர் & சோல்பரி என்ற 2 ஆணையர்களைநியமித்து, கள்ளர்களின் வரலாற்றை ஆய்வுசெய்துள்ளது. 

அவ்வாய்வறிக்கையில், கள்ளர்களை வியப்பில் ஆழ்த்தும் பல வரலாற்றுச் செய்திகள் உள்ளன. 
விசயாலயச் சோழன் மனைவி, வலங்கைமான் ஆவூருக்கு அருகிலுள்ள ஊத்துக்காடு மழவராயர் மகள். மேலும் தஞ்சை பெரியகோயிலைக்கட்டிய இராசராச சோழன், 
கல்லணையைக்கட்டிய கரிகாலன், 
 மகனின் மீது தேராட்டி பசுவுக்குநீதிவழங்கிய ஆரூர் மனுநீதிச்சோழன் அனைவரும் கள்ளர்களே! 

உலகிலேயே 2000 க்கும் மேற்பட்ட பட்டப்பெயர்கள் உள்ள ஒரே இனம் கள்ளர் இனம் மட்டுமே!!! இவ்வாறு அவ்வாய்வறிக்கை முடிவுகள் கூறுகின்றன. 

இராசராசோழனை பள்ளர், பறையர்,புலையர்,வலையர் என்றெல்லாம் இழிவுபடுத்துவதை தடுக்க நம் இனத்தினர் நீதிமன்றம் செல்லவேண்டிய அவசியமிருக்கிறது என்றே எண்ணுகின்றேன். ஏனெனில், நான் ஊத்துக்காடு மழவராயர் குடும்பத்தில் பிறந்தவன். இன்றைக்கும் ஊத்துக்காட்டில் 5 குடியானதெருக்கள் முழுவதும் வீரசிங்கநாட்டுகள்ளர் என்பவர்கள் மட்டுமே வசித்துவருகின்றோம். மேலும், சோழ மன்னர்கள் அனைவரும் வீர இனத்தினரான கள்ளர்குலத்தைச்சேர்ந்தவர்கள். எனவே, அவர்களைப்பற்றி எழுதவேண்டிய அவசியமும் அத்தியாவசியமும் எனக்கு ஏற்பட்டுள்ளதால், கட்டுரைகளை தொடங்குகின்றேன்.
பிற்காலச்சோழர்களின் ஆட்சிப்பட்டியல்:

வ
எண்
சோழமன்னனின்
பெயர்
மனைவியின்
பெயர்
ஆட்சிக்காலம்
தலைநகரம்
1
விசயாலயச் சோழன்
ஊத்துக்காடு
மழவராயர் மகள்
கிபி.846-881
பழையாறை
தஞ்சாவூர்
2
ஆதித்த சோழன்
வல்லவராயர் மகள்
இளங்கோபிச்சி
கி.பி.871-907
தஞ்சாவூர்
3
1ம் பராந்தக சோழன்
பழுவேட்டரையர் மகள்
கி,பி,907-953
தஞ்சாவூர்
4
கண்டராதித்த சோழன்
மழவராயர்மகள்
செம்பியன்மாதேவி
கி.பி.950- 957
தஞ்சாவூர்
5
அரிஞ்சய சோழன்
வைதும்பராயர் &
கொடும்புரார்மகள்கள்
கி.பி.956 -957
தஞ்சாவூர்
6
சுந்தரசோழன்
திருக்.மலையமான் சேதிராயர்மகள்
கி.பி.957 -970
தஞ்சாவூர்
7
உத்தமசோழன்
மழவராயர் & இருங்களார்மகள்கள்
கி.பி.957 -970
தஞ்சாவூர்
8
1ம்இராசராச சோழன்
கொடும்புரார் & பழுவேட்டரயர் மகள்கள்
கி.பி.985 -1014
தஞ்சாவூர்
9
1ம் இராசேந்திர சோழன்
5 மனைவிகள்பட்டம் தெரியவில்லை
கி.பி.1012 -1044
க.கொ.சோழபுரம்
10
முதல்இராசாதிராசசோழன்

கி.பி.1018 -1054
க.கொ.சோழபுரம்
11
2ம் இராசேந்திரசோழன்

கி.பி,1051-1063
க.கொ.சோழபுரம்
12
வீர்ராசேந்திர சோழன்

கிபி.1063 1070
க.கொ.சோழபுரம்
13
அதிராசேந்திரசோழன்

கிபி.1070
க.கொ.சோழபுரம்
14
முதல் குலோத்துங்கசோழன்
காடவராயர்மகள்
கிபி1070 1120
க.கொ.சோழபுரம்
15
விக்கிரமசோழன்

கிபி.1118 1136
க.கொ.சோழபுரம்
16
2ம் குலோத்துங்க சோழன்

கிபி.1133 1150
க.கொ.சோழபுரம்
17
2ம் இராசராச சோழன்
திருக்கோ.மலைய.சேதிராயர் மகள்
கிபி.1146 1163
க.கொ.சோழபுரம்
18
2ம் இராசாதிராசசோழன்

கிபி.1163 1178
க.கொ.சோழபுரம்
19
3ம் குலோத்துங்கசோழன்

கிபி.1178 1218
க.கொ.சோழபுரம்
20
3ம் இராசராச சோழன்
வல்லவரையர் (வாணர்குல) மகள்
கிபி.1216 1256
க.கொ.சோழபுரம்
21
3ம் இராசேந்திரசோழன்
சோழகுலமாதேவி
கிபி.1246 1279
க.கொ.சோழபுரம்
கள்வன் ராஜ ராஜன்” என்றும்,
read more...
இராசராச சோழன் கள்ளரே..ஆதாரங்கள் வருமாறுSocialTwist Tell-a-Friend

நிலம் -----FARM LANDS

0 comments
முன்னோக்கி நகர்வதே வாழ்வின் வளர்ச்சி. ஓடுகின்ற நதியைக் கொஞ்சம் உற்றுப் பாருங்கள். எந்த நதியாவது தன் பயணத்தில் திரும்பிப் போவதைப் பார்த்திருக்கிறீர்களா? ஓய்வெடுப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? நதியின் பயணத்திலும் தடைகள் உண்டு. சோதனைகள் இல்லாமல் சாதனைகள் சாத்தியமில்லை. தடைகளைத் தயக்கமின்றி கடந்து புதுப் புது வழிகளை அது தானாகவே உருவாக்கிக் கொள்கிறது. நதி தோன்றிய இடத்திலேயே எப்போதும் தங்கி விடுவதில்லை. அது முன்னோக்கியே நகர்கிறது, அதனால் வளர்கிறது. அந்த வளர்ச்சி, இலக்கை எட்டும் வரை தொடர்கிறது.
குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை
என நிலம் ஐந்து வகைப்படும்.
ஐந்து வகை நிலங்களும் இன்று நல்ல விலைக்கு போகிறது .
தமிழகத்தில் இன்று நிலங்களின் விலை ஆகாயத்தை தொடும் அளவு உயர்ந்து உள்ளது.

விவசாய நிலங்கள் ஒரு ஹெக்டர் நிலம் குறைந்தது ஏழு இலக்ஷம் ரூபாய் என விற்கிறது ..
மிக பெரும் விவசாய நிலங்களை வைத்து இருப்பவர்கள் . மிரசுரதார்கள் என்றும் ஜமிந்தார் என்றும் போன தலைமுறை அழைத்தது .............

இன்றைய நமது சமுதாய நிலை என்ன என்றால் படி படியாக நமது உறவுகள் நிலங்களை விற்று வருகிறார்கள் .
இதன் அடிப்படை காரணம் என்ன ?
வரவுக்கு மீறிய செலவு ...........
எப்படி ?
ஏன் இந்த நிலை ?
இதை பற்றி நமது சமுதாய தலைவர்கள் சிந்தனை செய்தார்களா ?
நமது எதிர்கால நிலை என்ன ?
இதற்க்கு மாற்று திட்டம் என்ன ?

இதை பற்றி நாம் இனி பேசப் போகிறோம் ....


அது சரி
தமிழகதில் ஒரு ஹெக்டர் நிலம் விலை குறைந்தது ஏழு இலக்ஷம் ரூபாய்
சரி மிக குறைந்த விலையேல்
எங்கு நிலம் விற்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா ????
இப்போது அந்த விபரங்களை பார்ப்போம் ..
உலக அளவில் நிலம் மிக குறைந்த விலையில் விற்கப்படும் பகுதி ..
ஆப்ரிக்க நாடுகள் தான் ..................
நாம் அங்கு நிலம் வாங்குவதற்கு நமது அரசும் ஆப்ரிக்க நாடுகளின் அரசும் உதவி செய்கிறது ..
எடுத்துக்காட்டாக
பெங்களூர் சேர்ந்த கருத்துரி குளோபல் லிமிடெட் என்ற நிறுவனம் எதியோப்பியாவில்
3,50 ,000 ACRE நிலம் இந்தியாவின் கடன் உதவியோடு வாங்கயுள்ளது .
அங்கு நிலத்தின் விலை எவ்வளவு தெரியுமா ?
ஹெக்டர் {2 .5 ACRE}ரூ .150 முதல் 500 வரை தான் ..
எதியோப்பியாவில் மட்டும் அல்ல மலாவி ,பிரேசில் ,இந்தோன்னாசிய ,மடகஸ்கார் ,அற்ஹெண்டீனா ,பரகுவாய் ,கானா,மாலி ,மொசாம்பிக் ,சூடான் டான்செனியா போன்ற நாடுகளிலும் இந்த விலை தான் ..


இதை பற்றிய ஆடியோ கேட்க விருப்பமா ?
இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்



.WMV    FORMAT 19.9MB FILE SIZE
PLAY THIS AUDIO FILE ANN REPLY ME


read more...
நிலம் -----FARM LANDSSocialTwist Tell-a-Friend

மொட்டை தலையும் முழங்காலும்

1 comments
அறிவும் அதிகாரமும் இணையும் புள்ளி முக்கியமானது

பிரித்தானிய காலனிய அரசானது 1834-ல் பலதுறை சார்ந்த அறிஞர்களைக் கொண்டு 'லண்டன் புள்ளியியல் கழகத்தை' துவக்குகிறது.

மக்கள்தொகைக் கணக்கெடுப்புகளை அடிப்படையாகக் கொண்ட புள்ளியியல் ஆய்வுகள் ஒரு ஆளுகைத் தொழில் நுட்பமாக (technology of governmentalizing) செயல்படுகிறது.

கெளடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒரு அரசின் கொள்கைகளை வகுப்பதற்கும், வரிவசூல் செய்வதற்கும் அவசியமானது என்று சொல்லப்பட்டுள்ளது (History of Indian Census, Office of the Register General & Census Commisioner, India-HIC).

பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் ஒரு பண்புரீதியான மாற்றம் இருந்தது. அது மக்கள் பராமரிப்பு என்கிற பொதுநோக்கு தொழில்நுட்பத்திற்கானது என்பதைவிட தனது காலனிய நாடுகளின் மக்களை புரிந்து கொள்வதற்கும் தனது அதிகார அமைப்பை கட்டமைக்கவும் மக்களை ஆளுகை செய்வதற்கான நுட்பங்களை படிக்கவுமான ஒரு அறிவுக் கட்டமைப்பாகச் செய்யப்பட்டது.  britemp5இச்செயலானது மூன்று முக்கிய அடிப்படைகளைக் கொண்டிருந்ததை காணமுடிகிறது


1.தனக்கு அயலான ஒரு சமூகத்தை புரிந்துகொள்ள முயல்வது
2. அதனை ஆள்வதற்கான அதிகார விதிகளைக் கண்டறிவது
3.தனது அதிகார அமைப்பிற்கேற்ப காலனிய சமூகத்தை மறுகட்டமைப்பு செய்வது.
read more...
மொட்டை தலையும் முழங்காலும்SocialTwist Tell-a-Friend

மதுரை--------பெண் சிசுக்களைக் கொல்கிறார்கள்

2 comments
மரம் அமைதியாக இருந்தாலும் காற்று விடுவதில்லை
"முப்பது வருசமாக செஞ்ச பாவம் இப்ப எங்க கிராமத்தையெல்லாம் கதறி அழவக்குதப்பா"

1980ல் தொடங்கி 2010 இன்று வரை நீடிக்கும் ஒரு கொடுமை. கள்ளி பால் ஊற்றி பெண்சிசுகளை கொல்லும் செயல் முக்குலத்துக்கும் பெயர்பெற்ற மதுரையைச் சுற்றியுள்ள 24 கிராமங்களில் இந்த கதறல்கள் கேட்கிறது.



ஏன் பெண் சிசுக்களைக் கொல்கிறார்கள்.

1. பெண் குழந்தைகள் பிறந்தால் வளர்த்து ஆளாக்கி, கட்டிக்கொடுத்து கடைசி வரை செலவு செய்தாக வேண்டும் என்ற பொருளாதார நெருக்கடியே அடிப்படை காரணம்.

2. பெண் குழந்தைகள் பிறக்கும் வீட்டை மற்ற குடும்பத்தினர் ஏளனமாக பார்க்கும் இழிவு.

3. பெண்களைக் கட்டிக்கொடுக்க 1 கிலோ தங்கம் தேவைப்படுகிறது. அதற்கு பின்னரும் தொடரும் வரதட்சனைக் கொடுமை.

4. பெண்களும், ஆண்களுக்கு சமமாக படிப்பதால் இருவருக்கும் நான் பெரிசா! நீ பெரிசா!! என சண்டைப்போட்டுக்கொண்டு மதுரைக்கோர்ட்டுக்கு படியேறுகிறார்கள்.

5. நல்ல படிக்கட்டும்ன்னு உயர்கல்விக்காக வேறு ஊர்களுக்கு அனுப்பும் போது சாதி மாறி காதலிப்பதால், அதனால் பெற்றோர்களுக்கு ஏற்படும் அசிங்கத்தால் பெற்றோர்கள் தற்கொலை செய்துக்கொள்ளுவது நீடிக்கிறது.



எப்படி கொல்லுகிறார்கள்

1. கள்ளிப்பால் ஊற்றுவது

2. நெல்மணியை ஊட்டுவது

3. கொதிக்க கொதிக்க கோழி சாறு கொடுப்பது.


இதன் எதிர் விளைவு

1. பெண்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதால் திருமணத்திற்கு பெண் கிடைப்பதில்லை.

2. சிசு கொலை நடக்கும் ஊர் என்பதால் மற்ற ஊரினர் பெண்கொடுக்க மறுக்கின்றனர்.

3. நீண்ட காலம் திருமணம் ஆகாமல் இருப்பதால் வாலிபர்கள், மதுரை போன்ற ஊர்களில் இருக்கும் தவறான இடத்திற்கு செல்வதால் பால்வினை நோய்களுக்கு உள்ளாகி ஆரோக்கியம் பாதிக்கும் அவலநிலை உண்டாகிறது.

4. இளைஞர்கள் இளமை இழந்துக்கொண்டிருக்கிறார்கள்



தீர்வு
1. வரதட்சனை இல்லாமல் திருமணம் செய்துக்கொள்வது.


2. பழைய காலம் போல பெண்வீட்டாருக்கு வரதட்சனைக் கொடுத்து திருமணம் செய்துக்கொள்ளுவது.


3. பெண்களை மதிக்கும் பண்பாட்டை உருவாக்குவது.


4. ஆணும், பெண்ணும் சமம் என்ற கருத்தை மக்கள் மனதில் வலுவாக பதியவைப்பது.
read more...
மதுரை--------பெண் சிசுக்களைக் கொல்கிறார்கள்SocialTwist Tell-a-Friend

மூவேந்தர் யார் ?---------ஒப்புதல் வாக்குமூலம் ---இது ஒரு மீள்பதிவு

1 comments
சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் கி.பி. 1564 முதல் 1604 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். நெல்வேலி மாறனின் முதலாம் மகனாவான்.அழகன் சீவலவேள் என்ற பெயரினைப்பெற்ற இவன் தனது தந்தையில் நினைவாக தென்காசியில் குலசேகரமுடையார் ஆலயம் அமைத்து விண்ணகரம் ஒன்றினையும் அமைத்தான். சிவனிடன் பக்தியுடைய இம்மன்னன் சிறந்த புலவனும் ஆவான். தமிழில் மிகுந்த பற்றுடன் இருந்த இம்மன்னன் வடமொழியிலும் தேர்ச்சி பெற்றவன் கூர்ம புராணம், வாயுசங்கிதை, காசிகாண்டம், இலிங்க புராணம், நறுந்தொகை ஆகிய நூல்களினை இயற்றிய பெருமையினையும் உடையவனாவான் இம்மன்னன். வடமொழி நூலான 'நைஷதம்' என்னும் நூலினை 'நைடதம்' என மொழி பெயர்த்த ..இவன் வெற்றிவேற்கை எனும் தமிழ் நூலையும் எழுதி உள்ளன்.

வெற்றிவேற்கை எனும் தமிழ் நூல் நீதி நூல் ...அதில் நீதி மட்டும் போதிக்காமல் ஒரு சரித்திர உண்மையையும் கூறி உள்ளார் . அதை காண்போம் .

''இருவர் தம்  சொல்லையும் எழுதரம்  கேட்டே
இருவரும் பொருந்த உரையார் ஆயின்
மனு முறை நெறியின் வழக்கு இழந்தவர்  தம்
மணமுற மருகி நின்று அழுத கண்ணீர்
முறையுறத் தேவர் மூவர் காக்கினும்
வழி வழி ஈர்வதோர் வாள் ஒக்கும்மே.''

பொருள் :வழக்கு தொடுத்தவர் அதனை  மறுப்பவர் இருவர் கூற்றையும்  எழு முறை கேட்டு அவை பொருந்த வராமல்
நீதி முறையாக கிடைக்க வில்லையானால் வழக்கை இழந்தவர் அறம் பிறழா மனதுடன் நின்று அழுத கண்ணீர் அறமுறை பிழையாது நீதி வழங்கும் ஆற்றல் மிக்க தேவர் மூவர் { சேர , சோழ ,பாண்டியர் } காக்கினும் . அந்த கண்ணீருக்கு காரணமானவர் வழி வழி தோன்றும் வாரிசுகளையும் அழிக்கும் வாளாகும்..

இந்த பாடலை இயற்றியவர் ஒரு பாண்டிய மன்னராவார்.
அவர் தேவர் மூவர் என்று சேர , சோழ பாண்டியரை விளித்து இருப்பதால்
மூவரசரும்  தேவர்  அதாவது முக்குலதோர் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் .
எனவே தற்க்காலத்தில் சிலர் மாறுபட கூறி வருவது முக்குலதோர் மீது உள்ள காழ்ப்பு உணர்ச்சியால் என்பதை அறியலாம் ..



இதில்  முறையுறத் தேவர் மூவர் என்பதில்

பொதுவாக முப்பெரும் தேவர் என சிவன் ,திருமால் , பிரமன் இவர்களை குறிப்பிடுவர் ...

மூவர் என்பது தமிழில் பொதுவாக சேர , சோழ ,பாண்டியரை குறிக்கும் .

ஆனால் இதில் முறையுற என்பதை கவனிக்க வேண்டும் . அதாவது நீதி நெறி வழுவாமல் காப்பாற்றுவது அரசர்களை குறிக்கும் ...

எடுத்துக்காட்டாக
"முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு 
இறை என்று வைக்கப்படும் ."
எனும் திருக்குறள் வாயிலாக அறியலாம் .

ஆதலால் இங்கு நீதி நெறியுடன் அரசு நடத்தும் சேர ,சோழ , பாண்டியரை குறிக்கும் என்பதை நன்கு அறியலாம்




எழுதியவர் : அல்லூர் கிழார் : சாமி .கரிகாலன் மற்றும் முகுந்தகுமார்[எ]  மாயதேவர்
read more...
மூவேந்தர் யார் ?---------ஒப்புதல் வாக்குமூலம் ---இது ஒரு மீள்பதிவுSocialTwist Tell-a-Friend

பசும்பொன்--திருவிழா-------- கற்றதும் பெற்றதும்

1 comments
எல்லாச் சொத்தும் களவே’ சோசலிச முன்னோடி புரூதோன். ‘சொத்துரிமைக்கு எதிரான மிகப் பெரிய குற்றம் சொத்தில்லாமல் இருப்பதுதான்’ பிரிட்டிஷ் மார்க்சிய வரலாற்றாசிரியர் இ. பி. தாம்சன்
ஒரு எழுத்தாளரின் அனுபவங்கள்
[1]மொத்தக்கூட்டமும் பொதுவான முறைபப்டுத்தல்கள் இல்லாமல் தன்னிச்சையாக அங்காங்கே சிறு குழுக்களாகச் செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள்
மக்களின் பலத்தை எவ்வாறு உறுதி செய்வது? மக்களை எவ்வாறு பலம் மிக்கவர்களாக உருவாக்குவது?? என்பது ஒரு குறிப்பான வேலைத்திட்டம்

[2]தேவர் அச்சாதிக்குள் தன்னை ஒடுக்கிக்கொண்ட ஒரு சாதித்தலைவராக இருக்கவில்லை. அவர் ஒரு தேசியத்தலைவர். ‘தேசியமும் தெய்வீகமும் என் இருகண்கள்’ என்று அறிவித்தவர். அந்தப்புரிதல் அங்கே வந்த மக்கள்திரளுக்கு இருக்கிறதா என்ற ஐயம் ஏற்பட்டது. அந்த திருவிழாவில் எங்குமே தேவர் அவர்களின் கருத்துக்களையும் அரசியல் பணியையும் வாழ்க்கை வரலாற்றையும் விளக்கும் ஒரு நிகழ்ச்சியோ , கண்காட்சியோ , ஏன் அறிவிப்புகளோகூட கண்ணில்படவில்லை. அவரைப்பற்றிய நூல்களோ அவர் ஆற்றிய உரைகளடங்கிய நூல்களோ விற்பனைக்கு வைத்திருக்கவில்லை. ஒரு தலைவரை அவரது கருத்துக்கள் வழியாக மக்கள் அறிவதே முறையானது. அதற்கான வசதிகள் அங்கே செய்யப்படவில்லை.

[3]உருக்கு போன்ற மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்ட மனிதராக அவரைச் சொல்கிறார்கள். அந்தக்கட்டுப்பாட்டை அவரது பிறந்தநாளில் கடைப்பிடித்தல்தான் அவருக்குப் பெருமை சேர்க்கும் என்று பட்டது.

[4]உட்பிரிவுகள் ஊர்ப்பிரிவுகளை எல்லாம் மறந்து மக்கள் ஒருங்கிணைவது மிகச்சிறந்த ஒரு விஷயம்.சரியான வழிகாட்டல் இருந்தால் அம்மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளைப் பெறவும், கல்வி தொழில் போன்ற பல துறைகளில் ஒருங்கிணைந்து வெற்றி பெறவும் அந்த மனநிலை உதவக்கூடும். எந்த ஒரு மக்கள் எழுச்சியையும் சரியாக வழிநடத்தினால் ஆக்கபூர்வமான சக்தியாக ஆக்க முடியும். அதைச்செய்யும் தலைவர்கள் அவர்களில் இருந்து உருவாகி
வரவேண்டும்

[5] சாதி என்பது இந்த நாட்டில் உள்ள மக்களின் பழங்குடி வேர். அவர்களின் அடையாளமாக தொன்றுதொட்டு இருந்து வருவது. அந்த அடையாளங்கள் காலப்போக்கில் பலவகையான மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கலாம் என்றாலும் அந்த வேர்ப்பிடிப்பு எப்போதுமே மாறியதில்லை. ஆகவே இன்றும் இந்தியாவின் எந்த ஒரு சாதியப்படிநிலையில் இருப்பவருக்கும் அவரது சுய அடையாளம் சாதியைச் சார்ந்தே உள்ளது

6]மூன்று முக்கியமான குறைபாடுகளைக் கண்டேன். ஒன்று தேவர்களின் உட்பிரிவுகளுக்கு இடையே இன்றும்கூட சரியான புரிந்துணர்வு இல்லை.

இரண்டு, அந்தச் சாதி இன்னமும் ஓர் அமைப்பாக திரளவில்லை. ஆகவே எந்தவகையான கட்டுப்பாடும் இல்லை.

மூன்றாவதாக, அவர்களுக்கு எந்த இலக்கும் இல்லை. எந்த அரசியல் கனவும், எந்த சமூகத்திட்டமும், எந்த பொருளியல் இலக்கும் இல்லை. தன்னிச்சையாகக் கிளம்பி வந்த ஒரு மக்கள்திரளாகவே இருந்தார்கள்.

[7]தேவர்கள் தங்களை உறுதியான இலக்குள்ள அமைப்பாக ஆக்கிக்கொண்டு, சகசாதிகளுடன் இயல்பாக இணைந்துபோய், தங்களுடைய கல்வி மற்றும் தொழில் நலன்களுக்காக சீராக போராடுவார்கள் என்றால் இந்தச் சாதியடையாளம் அவர்களுக்கு ஓர் எல்லை வரை நன்மைபயக்கக் கூடும். இன்றைய கட்டற்ற போக்கையும் சகஜாதிகள் மேல் வெறுப்பையும் அவர்கள் முன்னெடுத்தால் இழப்பு அவர்களுக்கே. தேவர்கள் அல்ல, எவர் நினைத்தாலும் சமூக மாற்றத்தை தடுத்து நிறுத்திவிடமுடியாது. அது காலவெள்ளம்.தேங்கியவர்கள் பின்னுக்குத்தள்ளப்படுவார்கள் என்பதே சமூக இயங்கியலின் விதியாகும்.

[8] நல்ல தலைமை இல்லை. நன்கு கற்றறிந்தவர்கள் அந்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் சாதிய அடையாளங்களைவெறுத்துவிடுகின்றனர். அந்த மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய நினைப்பவர்கள் சில சுயநலவாத பிற்போக்குவாதிகளின் பிடியில் சிக்கிக்கொள்கின்றனர். இந்த இடத்தில் சாதிப்பற்று சாதிவெறியாக மாற்றப்படுகிறது. அதை உணர்ந்து கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு எப்போது ஏற்படும்?

[9]வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் சரியான தலைமை அமைவது மிகச்சிரந்த வாய்ப்பு. அது அடிக்கடி நிகழ்வதில்லை. அவ்வகையில்பார்த்தால் பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களுக்கு ஒரு நல்லூழ். அது அம்மக்களுக்கு தலித்துக்கள் மீதிருந்த விரோதத்தை அழிக்கவும் அவர்களுக்கு உலகியல் சார்ந்த இலக்குகளை வளர்க்கவும் பேருதவி புரிந்திருக்கிறது. அப்படி ஒரு தலைமை தேவர்களுக்கு அமையட்டும் என ஆசைப்ப்படுவோம்
thanks to
திரு. ஜெயமோகன் - எழுத்தாளர்
thanian pandiyan
muthuramalingam
read more...
பசும்பொன்--திருவிழா-------- கற்றதும் பெற்றதும்SocialTwist Tell-a-Friend